அச்சு அசலாக ஹர்பஜன் சிங்கினை போன்றே பந்துவீசி அசத்திய ரோஹித் சர்மா – வைரலாகும் வீடியோ

Rohith

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அதன்படி சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான சென்னை மைதானத்தில் பவுலர்கள் பந்துவீச மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஏனெனில் முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களுக்கு கைகொடுக்கும் வகையில் மைதானம் இருப்பதால் விக்கெட்டுகள் விழுவது சற்று சிரமமாக உள்ளது.

Sibley 1

நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணி வீரர்கள் முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். அதன்பிறகு களமிறங்கிய இங்கிலாந்து அணியின் கேப்டன் இரட்டை சதமடித்து ஆட்டமிழந்து வெளியேறினார். அதுமட்டுமின்றி பென் ஸ்டோக்ஸ், சிப்லி ஆகியோர் அரைசதம் அடித்து இங்கிலாந்து அணியை பெரிய ரன் குவிப்பிற்கு அழைத்துச் சென்றனர்.

சென்னை மைதானம் முழுவதும் பவுலர்களுக்கு உதவும் வகையில் அல்லாமல் பேட்ஸ்மேன்களுக்கு கைகொடுத்ததால் இங்கிலாந்து வீரர்கள் சுலபமாக இந்திய வீரர்களின் பந்துகளை எதிர்கொண்டு ரன்களை குவித்து வருகின்றனர். இதனால் இந்திய அணி பவுலர்கள் சற்று திணறி வருகின்றனர் என்றே கூறலாம்.

அஸ்வின், சபாஷ் நதீம், சுந்தர் என மூன்று ஸ்பின்னர்கள் இருந்தும் விக்கெட்டுகளை வீழ்த்த போராடி வருகின்றனர். பும்ரா மற்றும் இஷாந்த் சர்மா கூட பந்து வீசுவது அவ்வளவு எளிதாக இல்லை. இந்நிலையில் பகுதி நேர பந்து வீச்சாளரான துவக்க வீரர் ரோகித் சர்மாவை பந்துவீச அழைத்தார் கேப்டன் விராட்கோலி.

- Advertisement -

harbhajan

அப்போது ரோகித் சர்மா ஹர்பஜன்சிங் ஸ்டைலில் ஓடி வந்து பந்தை வீசினார். இதுகுறித்து வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஏற்கனவே இவர் ஆஸ்திரேலிய தொடரின் போது சைனிக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாக மித வேகப்பந்து வீச்சாளராக ஓடிவந்து பந்து வீசியது அப்போது வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.