“லாங் சிக்ஸ் சேலஞ்ச்” என்னைவிட தூரமான சிக்ஸரை அடிப்பீர்களா ? – ரோஹித்துக்கு சவால் விட்ட இளம் வீரர்

Rohith
- Advertisement -

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரும், தற்போதைய இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்பவர் ரோகித்சர்மா. இந்திய அணிக்கு துணை கேப்டனாகவும், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக திகழ்கிறார். மேலும் இவரது தலைமையில் மும்பை அணி 4 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

எந்த போட்டியாக இருந்தாலும் எப்போது மைதானத்தில் களம் இறங்கினாலும் தொடக்கத்தில் பொறுமையாக ஆடும் ரோஹித் 25 பந்துகளில் கடந்த பின்னர் தனது அதிரடி மூலம் எதிரணி பந்துவீச்சாளர்களை மிரட்டும் வழக்கமுடையவர். மேலும் எதிரணி பவுலிங்கில் சரமாரியாக விலாசம் இவர் நிறைய சிக்ஸர்களை அடிக்கும் பழக்கத்தினை உடையவர்.

இதனால் எப்போதுமே இவருக்கு எதிராக பவுலர்கள் சற்று சிரமப்படுவார்கள். மேலும் அவரை சமாளிப்பது என்பது சாதாரணமாக விடயமாக அமையாது. குறிப்பாக சில நேரங்களில் பந்துகளை வானத்தின் உயரத்தில் பறக்க விட்டு சிக்ஸர் அடிப்பார். 50 ரன்களை கடந்து விட்டால் சிக்ஸர்களாக அடித்து நொறுக்கும் ரோகித்துக்கு இந்திய அணியின் இளம் வீரரான ரிஷப் பண்ட் தற்போது அவருக்கு ஒரு சவால் ஒன்றினை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக தற்போது கிரிக்கெட் போட்டிகள் இல்லை என்பதால் அனைத்து வீரர்களும் வீட்டில் தங்களது ஓய்வினை கழித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் அடிக்கடி லைவில் வரும் வீரர்கள் தங்களுக்குள் சில கேள்விகளைக் கேட்டுக் கொள்கின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் தற்போது வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரோகித் இடம் ஒரு கேள்வியை முன்வைத்தார். அதன்படி ரிஷப் பண்ட் உங்களை விட நீண்ட தூரத்திற்கு சிக்ஸர் அடிக்க அழைத்துள்ளார். அதற்கு என்ன பதில் கூறுகிறீர்கள் என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ரோகித் : ரிஷப் பண்ட் என்னை சிக்ஸர் சவாலுக்கு அழைக்குறாரா ? அவர் சர்வதேச கிரிக்கெட்டை ஒரு வருடம்தான் விளையாடி இருக்கிறார். அதற்குள் என்னை போட்டிக்கு அழைக்கிராறா ? என்று கிண்டலாக கூறியிருந்தார்.

Rohith

இதனையடுத்து ரிஷப் பண்ட்டை நெட்டிசன்கள் அனைவரும் விமர்சித்து வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 346 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 423 சிக்ஸர்களை விளாசி என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் 56 போட்டிகளில் விளையாடி 47 சிக்ஸர்கள் மட்டுமே அடித்துள்ளார்.

Advertisement