ரோஹித் மற்றும் ரெய்னா ஆகியோர் இணைந்து வெளியிட்ட பெஸ்ட் ஐ.பி.எல் அணி இதுதான் – வீரர்களின் பட்டியல் இதோ

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக தற்போது இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் தொடரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் இந்திய வீரர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு வீரர்களும் தங்களது வீட்டில் முடங்கி உள்ளனர். இந்நிலையில் இந்த ஓய்வு நேரத்தை சமூக வலைதளம் மூலமாக ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வரும் வீரர்கள் அவ்வப்போது நேரலையில் அவர்களுக்குள்ளேயே உரையாடிக் கொண்டும் நேரத்தைக் கழித்து வருகின்றனர்.

Raina

இந்நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் வீரரான ரோகித் சர்மா மற்றும் ரெய்னா ஆகியோர் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் நேரலையில் பேசிக்கொண்டார்கள். அப்போது இருவரும் தாங்கள் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இணைத்து ஒரு சிறந்த லெவன் அணியை தேர்வு செய்துள்ளனர்.

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இருபெரும் ஜாம்பவான் அணிகளாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே இந்த வீரர்கள் தேர்வு நடைபெற்றுள்ளதால் இந்த அணி பலமாகவே உள்ளது. மும்பை அணி கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

dwayne-bravo-kieron-pollard

மேலும் ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இதுவரை மூன்று முறை ஐபிஎல் தொடரை வென்றுள்ளது .மேலும் இதுவரை ஐ.பி.எல் வரலாற்றில் பங்கேற்ற அனைத்து தொடர்களிலும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற ஒரே ஒரு அணி என்றால் அது சென்னைதான். இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் பேசிய ரோகித் மட்டும் ரெய்னா ஆகியோர் இணைந்து மும்பை மற்றும் சிஎஸ்கே அணி வீரர்களை சேர்த்து சிறந்த சிறந்த லெவன் அணியை தேர்வு செய்துள்ளனர்.

- Advertisement -

அதில் சச்சின் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் ஹைடன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இருக்கின்றனர். அதன்பிறகு ஹர்டிக் பண்டியா, ரவீந்திர ஜடேஜா போன்ற இந்திய ஆல்ரவுண்டர்களும் இடம்பிடித்துள்ளார்கள். மேலும் மும்பை அணியை சேர்ந்த பொல்லார்ட் மற்றும் பும்ரா ஆகியோர் அணியில் உள்ளனர்.

Jadeja

சிஎஸ்கே அணியிலும் ராயுடு, டுப்லஸ்ஸிஸ் மற்றும் பிராவோ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த அணிக்கு கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டுள்ளார் .ரெய்னா மற்றும் ரோகித் ஆகியோர் வெளியிட்ட இந்த அணியில் அவரகள் இருவரையும் அவர்கள் சேர்த்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரெய்னா மற்றும் ரோஹித் தேர்வு செய்த அணி இதோ : 1) சச்சின் 2) ஹைடன் 3) ஹார்டிக் பாண்டியா 4) ஜடேஜா 5) பொல்லார்ட் 6) பும்ரா 7) தோனி 8) ராயுடு 9) ஹர்பஜன் சிங் 10) டூபிளெஸ்ஸிஸ் 11) பிராவோ