10 ஆண்டுகால சாதனையை இங்கிலாந்து மண்ணில் ஊதித்தள்ளிய ரோஹித் – ராகுல் ஜோடி – விவரம் இதோ

Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 65.4 ஓவர்களுக்கு 183 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி சார்பாக பும்ரா 4 விக்கெட்டுகளையும், ஷமி 3 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டுகள், சிராஜ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Kohli

- Advertisement -

அதனை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் குவித்தது. அதன் பின்னர் 2ஆம் நாள் ஆட்டத்தில் ரோகித் மற்றும் ராகுல் ஆகியோர் சிறப்பான பாட்னர்ஷிப் அமைக்க முதல் விக்கெட்டுக்கு இந்திய அணி 97 ரன்கள் குவித்தது.

இப்படி சிறப்பான அடித்தளம் கிடைத்ததால் இந்திய அணி பெரிய ரன் குவிப்பில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்து வந்த புஜாரா 4 ரன்களிலும் அவுட் ஆகியும், கோலி டக் அவுட் ஆகியும், ரகானே 5 ரன்களிலும் வெளியேறியதால் 112 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. அதன் பின்னர் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 125 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. தற்போது ராகுல் 57 ரன்களுடனும், பண்ட் 7 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது இந்திய அணியின் துவக்க வீரர்களாக விளையாடிய ரோகித் சர்மா மற்றும் கே.எல் ராகுல் ஆகியோரது ஜோடி இங்கிலாந்து மண்ணில் 10 ஆண்டுகளுக்கு பிறகு அற்புதமான சாதனை ஒன்றை நிகழ்த்தி உள்ளது. அந்த சாதனை யாதெனில் இதற்கு முன்னதாக இந்திய அணி 2011ஆம் ஆண்டு முதல் விக்கெட்டிற்கு அதிகபட்சமாக 63 ரன்களை குவித்து இருந்தது.

rahul 1

அதன் பின்னர் சுமார் 10 ஆண்டுகளாக இந்த 63 ரன்களை கூட எந்த ஒரு துவக்க ஜோடியாலும் இங்கிலாந்து மைதானத்தில் கடக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது ரோஹித் மற்றும் ராகுல் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் குவித்து இந்த சோகமான சாதனையை தகர்த்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement