கடைசி நாளான இன்று பீல்டிங் செய்ய வராமல் மருத்தவ கண்காணிப்பில் இருக்கும் – 2 வீரர்கள்

IND

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி கடந்த செப்டம்பர் 2-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியானது இன்று கடைசி நாளில் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியின் அனைத்து விக்கெட்டுகளை வீழ்த்தினால் வெற்றி பெறுவதற்கு ஒரு வாய்ப்பு உள்ளது.

pujara

இல்லையெனில் போட்டி டிராவில் முடிவடையவே அதிக வாய்ப்பு இருக்கும். இந்நிலையில் இன்றைய கடைசி நாள் போட்டியில் 2 இந்திய வீரர்கள் பீல்டிங் செய்ய மாட்டார்கள் என பிசிசிஐ தங்களது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தங்கள் ஒன்றினை வெளியிட்டு உள்ளது.

- Advertisement -

அதில் துவக்க வீரர் ரோகித் சர்மா இடது கால் மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாகவும், புஜாரா இடது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாகவும் அவதிப்பட்டு வருவதால் தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். இதன் காரணமாக அவர்கள் இன்று கடைசி நாளில் பீல்டிங் செய்ய மாட்டார்கள் என்று அறிவித்துள்ளது.

இந்த இருவரும் இந்த போட்டியின் 2வது இன்னிங்சில் 153 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியின் முன்னிலைக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றனர். அதுமட்டுமின்றி அடுத்து நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இரு வீரர்களும் அணியில் விளையாட வேண்டிய முக்கிய வீரர்கள் என்பதனால் அவர்களுக்கு இந்த ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த 2வது இன்னிங்சில் ரோஹித் சர்மா 127 ரன்களையும், புஜாரா 61 ரன்களையும் குவித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Advertisement