அடுத்த போட்டியில் சூரியகுமார் யாதவ் விளையாடமாட்டார் – முன்கூட்டியே அறிவித்த ரோஹித் சர்மா (காரணம் என்ன?)

Rohit-and-SKY
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நேற்று கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்ற முக்கியமான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியானது 16 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரையும் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை பெற்றுள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த இரண்டாவது போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்கள் குவித்தது.

INDvsRSA Cup

- Advertisement -

பின்னர் 238 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது 221 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்ததால் 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியை தழுவியது. தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்த முக்கிய காரணமாக இந்த இரண்டாவது போட்டியில் சூரியகுமார் யாதவ் விளையாடிய அதிரடியான ஆட்டம் காரணமாக அமைந்தது.

ஏனெனில் 22 பந்துகளை சந்தித்த அவர் 5 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என 277 ஸ்ட்ரைக் ரேட் உடன் 61 ரன்களை குவித்து அசத்தினார். நேற்று அவர் ஆடிய ஆட்டம் அவரது டி20 இன்னிங்ஸ்களில் மிக முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. கடந்த சில தொடர்களாகவே மிக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூரியகுமார் யாதவ் இதே ஃபார்முடன் இருக்கும் பட்சத்தில் நிச்சயம் டி20 உலக கோப்பையிலும் இந்திய அணிக்காக அவர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று அனைவரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

Suryakumar YAdav

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நாளை நடைபெற உள்ள கடைசி டி20 போட்டியில் சூரியகுமார் யாதவ் விளையாட மாட்டார் என முன்கூட்டியே இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நேற்று ஆட்டம் முடியும்போது தெரிவித்தார். அதன்படி நேற்றைய போட்டியின் வெற்றி குறித்து பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்ட ரோகித் சர்மா :

- Advertisement -

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி போட்டியில் சூரியகுமார் யாதவ் அந்த விளையாட மாட்டார் என்றும் அறிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில் : சூரியகுமார் யாதவ் அடுத்து 23-ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை போட்டியில் தான் விளையாடுவார். அதுவரை அவரை நாங்கள் வேறு எந்த போட்டியிலும் விளையாட வைக்க மாட்டோம் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க : எனக்கு எதுக்கு ஆட்டநாயகன் விருது குடுத்தீங்க. நியாயமா அவருக்கு தான் இது போகனும் – கே.எல் ராகுல் பெருந்தன்மை

ஏனெனில் அவரது இந்த ஃபார்மை அவர் தற்போது அனுபவித்து விளையாடி வருவதால் அவரை நேரடியாக உலக கோப்பையில் விளையாட வைக்க போகிறோம். அதுவரை அவர் தேவையான ஓய்வில் இருக்கவே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் ரோகித் சர்மா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement