ஆசியக்கோப்பை : இந்த தொடரில் ஒன்றல்ல. ரெண்டல்ல. ஏகப்பட்ட சாதனைகளை படைக்க காத்திருக்கும் – ரோஹித் சர்மா

Rohith
- Advertisement -

கடந்த 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போது ஆறு அணிகள் பங்கேற்றுள்ள ஆசிய கோப்பை தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆகஸ்ட் 27-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் முதல் போட்டியாக ஆகஸ்ட் 28-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறது.

INDvsPAK

- Advertisement -

ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற உள்ள இந்த இந்தியா பாகிஸ்தான் போட்டியானது மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் இந்த ஆசியக் கோப்பை தொடரில் முழுநேர கேப்டனாக விளையாடவுள்ள ரோஹித் சர்மா பல்வேறு சாதனைகளை படைக்க காத்திருக்கிறார்.

ஏற்கனவே ஆசிய கோப்பை தொடரில் ரோஹித் சர்மா இதுவரை 27 போட்டிகளின் விளையாடி 21 சிக்ஸர்களை அடித்துள்ளார். இன்னும் அவர் ஆறு சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில் ஆசிய கோப்பை தொடரில் அதிக சிக்சர்களை அடித்த வீரர் என்ற சாதனையில் பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடிப்பார்.

rohith 1

அப்ரிடி இதுவரை ஆசிய கோப்பை தொடரில் 27 போட்டிகளில் விளையாடி 26 சிக்ஸர்களை அடித்து இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து ரோகித் சர்மா 21 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மேலும் இந்த ஆசிய கோப்பை தொடரில் இதுவரை 27 போட்டியில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 883 ரன்கள் குவித்து சச்சினுக்கு(971 ரன்கள்) அடுத்து ஆசியக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். ஒருவேளை இந்த தொடரில் அவர் மேலும் 117 ரன்களை குவிக்கும் பட்சத்தில் ஆசிய கோப்பை தொடரில் ஆயிரம் ரன்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார்.

இதையும் படிங்க : ஆசியக்கோப்பை : அஷ்வினோடு சேர்த்து 4 வீரர்களுக்கு பிளேயிங் லெவனில் இடமில்லை – உறுதிசெய்த புகைப்படம்

அதுமட்டும் இன்றி மேலும் 221 ரன்களை குவிக்கும் பட்சத்தில் ஆசிய கோப்பை தொடரில் அதிக ரன்களை குவித்த இலங்கை வீரர் ஜெயசூர்யாவை (1220 ரன்கள்) பின்னுக்கு தள்ளி அந்த பட்டியலிலும் முதலிடம் பிடிக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement