சச்சின் மற்றும் ஏ.பி.டி ஆகியோரின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா – நடக்குமா?

Rohit-ABD-Sachin
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரினை அடுத்து தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே டி20 தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணியானது இந்த ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் முனைப்புடன் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியானது இன்று லண்டன் கென்னிங்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

INDvsENG

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த இந்திய அணி சிறப்பாக பந்துவீசி இங்கிலாந்து அணியை 110 ரன்களில் சுருட்டியது. அதனை தொடர்ந்து தற்போது 111 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் நிச்சயம் இந்திய அணி எளிதாக வெற்றிபெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெறுவது உறுதி.

இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முக்கியமான ஒரு சாதனையை தகர்க்க காத்திருக்கிறார். அதன்படி இதுவரை 230 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 44 அரை சதங்கள் மற்றும் 29 சதங்களுடன் 9,283 ரன்களை குவித்துள்ளார். இதில் இங்கிலாந்தில் மட்டும் அவர் ஏழு சதங்கள் அடித்துள்ளார்.

rohith

இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட வெளிநாட்டில் அதிக ஒருநாள் சதங்களை அடித்தவர்களின் பட்டியலில் டிவில்லியர்ஸ், சச்சின், சயீத் அன்வர் ஆகியோருடன் ரோகித் சர்மா தற்போது சமநிலையில் உள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் நடித்துள்ள 29 சதங்களில் 7 சதங்கள் இங்கிலாந்தில் மட்டும் அடித்துள்ளார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் 5 சதங்களை அவர் உலகக்கோப்பை தொடரின் போதே அடித்து அசத்தியிருந்தார். இந்நிலையில் மேலும் ஒரு சதத்தை அவர் இந்த மூன்று போட்டியில் கொண்ட ஒருநாள் தொடரில் அடிக்கும் பட்சத்தில் ஒரு குறிப்பிட்ட வெளிநாட்டில் அதிக ஒருநாள் சதங்களை அடித்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.

இதையும் படிங்க : அன்றும் இன்றும் தொடரும் விமர்சனங்கள், விட்டுக்கொடுக்காமல் நண்பர்களாக எதிர்கொள்ளும் விராட் – ரோஹித்

தற்போது வரை சச்சின் டெண்டுல்கர் (UAE) நாட்டில் ஏழு சதங்கள், ஏ.பி.டி இந்திய மண்ணில் ஏழு சதங்கள், சயீத் அன்வர் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏழு சதங்கள் என அந்த பட்டியலில் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். அவர்களுடன் இருக்கும் ரோஹித் இங்கிலாந்து மண்ணில் இன்னும் ஒரு சதம் அடித்தால் கூட அந்த சாதனையை முறியடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement