அன்றும் இன்றும் தொடரும் விமர்சனங்கள், விட்டுக்கொடுக்காமல் நண்பர்களாக எதிர்கொள்ளும் விராட் – ரோஹித்

rohitsharma
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் கிரிக்கெட் தொடரில் இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் பெரிய அளவில் ரன்கள் எடுக்காததால் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக கடந்த 3 வருடங்களாக சதத்தை அடிக்க முடியாமல் தவித்து வரும் விராட் கோலி தினம்தோறும் உலக அளவில் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் ஜாம்பவான்களின் விமர்சனங்களை வாங்கிக் கட்டிக் கொண்டு வருகிறார்.

கடந்த 2008இல் அறிமுகமாகி 2011 முதல் 3 வகையான இந்திய அணியிலும் தன்னுடைய மிகச் சிறந்த பேட்டிங் திறமையால் ரன் மெஷினாக ஏராளமான ரன்களையும் 70 சதங்களை அடித்துள்ள அவர் இந்தியாவுக்கு நிறைய சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து தன்னை ஒரு உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்று ஏற்கனவே நிரூபித்துள்ளார்.

- Advertisement -

விமர்சனத்தில் விராட்:
ஆனால் கடைசியாக கடந்த 2019இல் சதமடித்திருந்த அவர் அதன்பின் டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் 100 இன்னிங்ஸ்களுக்கும் மேலாக சதமடிக்க முடியாமல் தவிப்பதால் பொறுமை இழந்த கபில் தேவ் போன்ற பல முன்னாள் வீரர்கள் பெரிய பெயரை வைத்துக்கொண்டு எத்தனை நாட்கள் ரன்கள் அடிக்காமல் காலத்தை ஓட்ட முடியும் என்ற வகையில் கடுமையான விமர்சிக்கின்றனர். இத்தனைக்கும் கடந்த 2017 முதல் 3 வகையான இந்திய அணிக்கும் ஐபிஎல் தொடரிலும் கேப்டனாக செயல்பட்டு வந்த அவர் கேப்டன்ஷிப் அழுத்தம் தனது பேட்டிங்கை பாதித்ததாக உணர்ந்த காரணத்தால் அந்தப் பதவிகளில் இருந்து விலகி கடந்த ஜனவரியில் இருந்து சுதந்திர பறவையாக விளையாடி வருகிறார்.

ஆனாலும் முன்னேற்றத்தைக் காண முடியாத அவர் ஐபிஎல் 2022 தொடரில் 3 கோல்டன் டக் அவுட் உட்பட முன்பை விட மோசமாக பேட்டிங் செய்கிறார். ஓடிஓடி ரன்கள் சேர்த்த களைப்பு அவரின் ஆட்டத்தில் தெரிவதால் சில மாதங்கள் ஓய்வெடுத்து புத்துணர்ச்சியுடன் திரும்புமாறு முன்னாள் வீரர்கள் கொடுத்த அறிவுரையை ஏற்காத அவர் தொடர்ச்சியாக விளையாடும் நிலையில் ஒவ்வொரு போட்டியிலும் பெரிய ரன்கள் எடுக்க தவறுவதால் இருமடங்கு விமர்சனங்களை எதிர் கொள்கிறார்.

- Advertisement -

ரோஹித்தின் ஆதரவு:
இருப்பினும் இந்த மோசமான நிலையிலும் இந்திய கேப்டன் ரோகித் சர்மா அவருக்கு தொடர்ச்சியாக ஆதரவு கொடுத்து வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டிக்குப்பின் விராட் கோலி மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்து அவர் பேசியது பின்வருமாறு. “அவர் மீதான விமர்சனங்கள் எங்களுக்கு கடினமாக இல்லை. ஏனெனில் வெளிப்புற சத்தங்களை நாங்கள் கேட்பதில்லை. அதுபோன்ற வல்லுனர்கள் யாரென்றே எங்களுக்கு தெரியாது. வெளியிலிருந்து பார்க்கிறவர்களுக்கு அணிக்குள் என்ன நடக்கிறது என்பது தெரியாது. ஒரு அணியை உருவாக்கும் எங்களுக்கு சில சிந்தனைகளும் உள்ளது”

“அனைத்து வீரர்களுக்கும் ஆதரவு அளிக்கப்படுகிறது என்பது வெளிப்புறத்தில் உள்ளவர்களுக்கு தெரியாது என்பதால் அது எங்களுக்கு முக்கியமல்ல. நீங்கள் பேசும் பார்ம் என்பது எப்போதும் மேலும் கீழும் வரக்கூடியது. ஆனால் ஒரு வீரரின் தரம் எப்போதும் மாறாது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அந்த தரத்துக்கு தான் நாங்கள் ஆதரவளிக்கிறோம். இந்த மோசமான நிலைமை எனக்கும் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது என்பதால் இது புதிதல்ல. நீண்ட காலங்களாக சிறப்பாக செயல்பட்ட ஒருவர் ஒருசில மோசமான தொடர்களுக்காக தூக்கி எறிய முடியாது. எனவே அணியை வழிநடத்தும் எங்களுக்கு அந்த தரம் தெரியும்” என்று பதிலடி கொடுத்தார்.

- Advertisement -

விராட்டின் ஆதரவு:
கடந்த வருடம் இதே ஜூலை 12-ஆம் தேதி இந்தியாவின் 3 வகையான கேப்டனாக விராட் கோலி இருந்த நிலையில் அவரைப்போலவே சமீப காலங்களில் பெரிய அளவில் ரன்களை எடுக்க முடியாமல் தவிக்கும் ரோகித் சர்மாவை அணியில் இருந்து நீக்குமாறு விமர்சனங்கள் எழுந்தன. அதற்கு அக்டோபர் மாதம் துபாயில் நடந்த டி20 உலகக் கோப்பையின் போது ரோகித் சர்மாவிற்கு ஆதரவாக அப்போதைய கேப்டன் விராட் கோலி அளித்த பதில் இதோ.

“இந்த கேள்வியை உங்களிடமே நான் திரும்பி கேட்கிறேன்? ரோகித் சர்மாவை டி20 கிரிக்கெட்டில் இருந்து நீக்கலாமா? நீங்கள் ரோகித் சர்மாவை நீக்குவீர்களா. ஒருவேளை உங்களுக்கு ஏற்றவாறு செய்தி வேண்டுமானால் முன்கூட்டியே சொல்லுங்கள் அதற்கேற்றாற்போல் நான் பதிலளிக்கிறேன்” என்று கேள்வி எழுப்பிய செய்தியாளரை கோபமாக சீண்டினார்.

- Advertisement -

மொத்தத்தில் இந்தியாவுக்காக எத்தனையோ போட்டிகளில் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களையும் சதங்களையும் அடித்து வெற்றிகளை பெற்றுக்கொடுத்த இவர்கள் களத்தில் நண்பர்களாகவே விளையாடி வருகின்றனர். “ஆபத்தில் உதவுபவனே சிறந்த நண்பன்” என்று கூறுவார்கள்.

இதையும் படிங்க : 75வது இந்திய சுதந்திர தின ஸ்பெஷல் கிரிக்கெட் போட்டிக்காக நடக்கும் ஏற்பாடுகள் – வெளியான சூப்பர் தகவல்

அதை இது போன்ற கடினமான தருணங்களில் விராட் கோலி கேப்டனாக இருந்தபோது ரோஹித் சர்மாவுக்கும் ரோகித் சர்மா கேப்டனாக இருக்கும்போது விராட் கோலிக்கும் என ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் ஆதரவு கொடுத்து நண்பர்களாக விமர்சனங்களை எதிர்கொள்வது உண்மையாகவே நட்பிற்கு இலக்கணமாக பாராட்டக்கூடிய அம்சமாகும்.

Advertisement