எங்க இறங்கினாலும் மரண அடி தான் …Surprise கொடுக்கும் அதிரடி வீரர் ! – புகைப்படம் உள்ளே

rohit
- Advertisement -

நாளை தொடங்கவுள்ள ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் சென்னை அணியை சந்திக்க இப்போதே தயாராகிவிட்டதாக மும்பை அணியின் கேப்டன் ரோகித்சர்மா தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டின் 11வது ஐபிஎல் சீசன் நாளை தொடங்கப்பட உள்ளன.

rohit

- Advertisement -

நாளை (சனிக்கிழமை) முதல் அனைவரும் மிகவும் எதிர்பார்த்த ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கப்படவுள்ளது. 8 அணிகள் கலந்துகொள்ளும் இந்த ஐபிஎல் போட்டிகளானதுஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில் தொடக்க மற்றும் இறுதிப் போட்டியை மும்பையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாளை இரவு 11வது சீசனின் முதல்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகின்றது.முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பலப்பரிட்சை நடத்தவுள்ளன.இரண்டாண்டு தடைக்கு பின்னர் மீண்டும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணி களமிறங்குவதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது.

அதேவேளையில் நடப்பு சாம்பியனான மும்பை அணியும் நாளை இரவு தனது பலத்தை சொந்த மண்ணில் காட்டிட உள்ளது. எனவே நாளைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.இந்நிலையில் மும்பை அணியின் கேப்டன் ரோகித்சர்மா பத்திரிகையாளர்களிடம் பேசியபோது “மும்பை அணியின் பேட்டிங் வரிசை பலமாக உள்ளது.

- Advertisement -

mumbai

சிறந்த தொடக்க ஆட்டக்காரர்கள் மும்பை அணியில் இருப்பதால் நான் தொடக்க ஆட்டக்காரராக இறங்குவது சந்தேகம் தான். அதே நேரத்தில் மிடில் ஆர்டரும் பலமாகவே உள்ளது. மிடில் ஆர்டரில் இஷான் கிஷன் மற்றும் லெவிஸ் போன்ற பேட்ஸ்மேன்கள் உள்ளதால் நான் எந்தவரிசையில் இறங்குவேன் என்பதை சர்ப்ரைஸாக வைத்துள்ளேன்.

இந்தமுறையும் கோப்பையை வெல்லும் அளவிற்கு பலம்வாய்ந்த அணியாக நாங்கள் உள்ளோம். அணிக்கு வெளியே நடக்கும் எந்தவொரு பிரச்சனைகளும் ஐபிஎல்-இல் எங்களை பாதிக்காது. அதுவே எங்களின் பலமும் கூட. சென்னை அணியுடனான முதல்போட்டியை எதிர்கொள்ள நானும் எனது அணியும் தயாராகவே உள்ளது.நடப்பு சாம்பியனான நாங்கள் கோப்பையை தக்கவைத்துக்கொள்வோம்” என்றார்.

Advertisement