IND vs AUS : நேற்றைய போட்டியில் ஏன் ஜஸ்ப்ரீத் பும்ரா விளையாடவில்லை? – ரோஹித் சர்மா விளக்கம்

Bumrah
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நேற்று மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக மிக முக்கியமான தொடராக பார்க்கப்படும் இந்த தொடரில் இந்திய அணி தங்களது முழு பலத்துடன் பங்கேற்றுள்ளதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்த வேளையில் நேற்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது.

INDvsAUS

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக ஹார்டிக் பாண்டியா 71 ரன்களையும், ராகுல் 55 ரன்களையும், சூரியகுமார் யாதவ் 46 ரன்களையும் குவித்தனர். பின்னர் 209 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது துவக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடியது.

இறுதியில் 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் குவித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி சார்பாக கேமரூன் கிரீன் 61 ரன்களையும், மேத்யூ வேட் ஆட்டமிழக்காமல் 45 ரன்கள் குவித்தனர். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Mathew Wade

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஜஸ்ப்ரீத் பும்ரா நேற்றைய போட்டியில் விளையாடாதது இந்திய அணியின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஆசியக் கோப்பை தொடரிலேயே காயம் காரணமாக விளையாடாமல் இருந்து பும்ரா தற்போது இந்திய அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.

- Advertisement -

ஆனாலும் அவர் நேற்றைய போட்டியில் ஏன் விளையாடவில்லை என்பது குறித்து இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா போட்டியின் துவக்கத்திலேயே சில கருத்துக்களை கூறியிந்தார். அதன்படி ரோஹித் கூறுகையில் : ஜஸ்ப்ரீத் பும்ரா தற்போது அணிக்கு திரும்பி இருந்தாலும் அவர் இந்த முதல் போட்டியில் ஓய்வு காரணமாக விளையாடவில்லை.

இதையும் படிங்க : கிரிக்கெட்டை போலவே நடனத்திலும் அசத்தும் திறமை பெற்றுள்ள 5 டான்ஸர் கிரிக்கெட் வீரர்கள்

ஆனால் நிச்சயம் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் அவர் மீண்டும் இந்திய அணியில் இணைந்து விளையாடுவார் என்றும் தெளிவான தகவலை கூறியிருந்தார். பும்ராவிற்கு பதிலாக விளையாடிய உமேஷ் யாதவ் நேற்றைய போட்டியில் இரண்டு ஓவர்களை வீசி 27 ரன்களை கசிய விட்டது தோல்விக்கு காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement