பும்ரா இடத்தை நீங்கதான் நிரப்பனும்னு நான் அவர்கிட்ட சொன்னேன் – அவரும் சூப்பரா பண்றாரு ரோஹித் மகிழ்ச்சி

Rohit-Sharma
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரானது தற்போது ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் சில தினங்களில் சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நிறைவடைய உள்ள வேளையில் அரையறுதி சுற்றுக்கான வாய்ப்பை பெற அனைத்து அணிகளும் தங்களது கடுமையான போராட்டங்களை அளித்து வருகின்றன. அந்த வகையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நேற்று அடிலெயிடு ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முக்கியமான போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக விளையாடியது.

Arshdeep Singh 1

- Advertisement -

இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது போட்டியின் கடைசி ஓவரில் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்று தற்போது அரையிறுதி சுற்றில் ஒரு காலை வைத்துள்ளது என்றே கூறலாம். இந்த வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 184 ரன்கள் குவித்து இருந்த வேளையில் இரண்டாவதாக வங்கதேச அணி பேட்டிங் செய்யும்போது மழை குறுக்கிட்டது.

அதனால் போட்டி 16 ஓவர்களில் 151 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டியின் போது கடைசி ஓவரில் வங்கதேச அணிக்கு அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவை என்ற நிலையில் கடைசி ஓவரை வீச அர்ஷ்தீப் சிங்கை ரோகித் அழைத்தார். அந்த வகையில் மிகச் சிறப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப் 14 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணிக்கு வெற்றியும் தேடிக் கொடுத்தார்.

Arshdeep Singh

இந்நிலையில் இந்த போட்டியில் கடைசி ஓவரை வீசி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற அர்ஷ்தீப் சிங் குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

ஒரு இளம் வீரராக இவ்வளவு அழுத்தமான போட்டியில் சிறப்பாக செயல்படுவது என்பது சுலபம் கிடையாது. ஆனால் நாங்கள் அதற்காகவே அவரை கடந்த 9 மாதங்களாக தயார்படுத்தி வருகிறோம். அவரும் இறுதி ஓவர்களில் பந்து வீசுவதை சிறப்பாக கையாண்டு வருகிறார் என்று ரோகித் சர்மா தனது பாராட்டுகளை தெரிவித்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் :

இதையும் படிங்க : பும்ராவின் வரலாற்று சாதனை சமன் செய்து அவரில்லாத குறையை தீர்த்த அர்ஷ்தீப் சிங் – படைத்த 2 புதிய சாதனைகள்

பும்ரா இல்லாததால் அந்த இடத்தில் பந்துவீச தயாராக இருக்கும்படி ஏற்கனவே நான் கூறியிருந்தேன். அந்த வகையில் அவரும் தொடர்ச்சியாக சிறப்பாக பந்துவீசி வருகிறார். மேலும் இதை அவர் தொடர்ந்து சரியாக செய்வார் என்று நம்புகிறேன். அர்ஷ்தீப் சிங்கின் இந்த வளர்ச்சி மிகச் சிறப்பான ஒன்று என்று ரோகித் சர்மா பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement