பும்ராவின் வரலாற்று சாதனை சமன் செய்து அவரில்லாத குறையை தீர்த்த அர்ஷ்தீப் சிங் – படைத்த 2 புதிய சாதனைகள்

Arshdeep-Singh
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் அனல் பறக்க நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் நவம்பர் 2ஆம் தேதியன்று நடைபெற்ற 35வது லீக் போட்டியில் வங்கதேசத்தை தோற்கடிக்க வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் பரபரப்பாக நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 184/6 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் கேஎல் ராகுல் 50 (32) ரன்களும் விராட் கோலி 64* (44) ரன்களும் குவித்தனர். அதைத் தொடர்ந்து 185 ரன்களை துரத்திய வங்கதேசத்துக்கு பவர் ப்ளே ஓவர்களில் இந்திய பவுலர்களை புரட்டி எடுத்த லிட்டன் தாஸ் வெறும் 21 பந்துகளில் அரை சதமடித்து மிரட்டினார்.

அதனால் 7 ஓவர்களிலேயே 66/0 ரன்களை எடுத்திருந்த போது மழை வந்ததால் டிஎல்எஸ் விதிமுறைப்படி வங்கதேசம் 17 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தது. அதனால் இந்திய ரசிகர்கள் கவலையடைந்த போது அதிர்ஷ்டமாக நின்ற மழையால் 16 ஓவரில் 151 ரன்கள் தேவை என்ற புதிய இலக்கு வங்கதேசத்துக்கு நிர்ணயிக்கப்பட்டது. அப்போது 7 பவுண்டரி 3 சிக்ஸருடன் 60 (27) ரன்கள் எடுத்த மிரட்டிய லிட்டர் தாஸை கேஎல் ராகுல் ரன் அவுட் செய்து திருப்பு முனையை ஏற்படுத்தினார்.

- Advertisement -

பும்ராவுக்கு நிகராக:
குறிப்பாக கடைசி 5 ஓவரில் வங்கதேசத்தின் வெற்றிக்கு 52 ரன்கள் தேவைப்பட்டபோது 12வது ஓவரை வீசிய அர்ஷிதீப் சிங் முதல் பந்திலேயே அஃபிப் ஹொசைனை 3 (5) ரன்களில் அவுட்டாக்கி 5வது பந்தில் கேப்டன் சாகிப் அல் ஹசனை 13 (12) ரன்களில் காலி செய்து வெறும் 2 ரன்களை மட்டுமே கொடுத்தார். மேலும் 14வது ஓவரில் 12 ரன்கள் மட்டுமே கொடுத்த அவர் கடைசி ஓவரில் வங்கதேசத்தின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்ட போது 1, 6, 0, 2, 4, 1 என சிறப்பாக செயல்பட்டு திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

அதனால் பங்கேற்ற 4 போட்டிகளில் 3வது வெற்றியை பதிவு செய்த இந்தியா அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. இந்த வெற்றிக்கு 64* ரன்கள் குவித்த விராட் கோலி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டாலும் 4 ஓவர்களில் குறிப்பாக கடைசி 3 ஓவர்களில் அபாரமாக செயல்பட்டு 2 விக்கெட்டுகளை எடுத்த இளம் பவுலர் அர்ஷிதீப் சிங் அறிவிக்கப்படாத ஆட்டநாயகனாக செயல்பட்டார் என்றே கூறலாம். கடந்த 2019 ஐபிஎல் தொடரில் அறிமுகமான இவர் கடந்த சில வருடங்களில் தன்னைத்தானே மெருகேற்றிக் கொண்டு அனைவரும் பாராட்டு வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

அதிலும் இந்த வருட ஐபிஎல் தொடரில் டெத் ஓவர்களில் குறைவான ரன்களை கொடுத்து விக்கெட்களை எடுத்ததால் உலக அளவில் பாராட்டுகளை பெற்ற அவர் கடந்த ஜூலை மாதம் முதல் முறையாக இந்தியாவுக்காக அறிமுகமானார். அதில் பெரும்பாலான போட்டிகளில் அசத்திய அவர் சமீபத்திய ஆசிய கோப்பை மற்றும் தென்ஆப்பிரிக்க டி20 தொடரில் ரன்களை வாரி வழங்கி விமர்சனத்திற்கு உள்ளானார்.

இருப்பினும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்பதால் இந்த உலகக்கோப்பையில் தேர்வு செய்யப்பட்ட அவர் முதல் போட்டியிலேயே பாபர் அசாமை கோல்டன் டக் அவுட்டாகியது முதல் தென்னாபிரிக்காவுக்கு எதிராக குயின் டீ காக்கை 1 ரன்னில் காலி செய்தது வரை புதிய பந்தில் ஸ்விங் செய்து மிரட்டுவது போலவே டெத் ஓவர்களிலும் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்.

- Advertisement -

1. இதுவரை 4 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் இந்த உலகக் கோப்பையில் அதிக விக்கெட் எடுத்த இந்திய பந்து வீச்சாளராக சாதனை படைத்து சூப்பர் 12 சுற்றில் அதிக விக்கெட்களை எடுத்த பவுலராகவும் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த பட்டியல்:
1. அர்ஷிதீப் சிங் : 9*
1. சாம் கரண் : 9*
2. தஸ்கின் அஹமத் : 8*
3. பால் வேன் மீக்ரன் : 7*

2. அதைவிட இந்த வருடம் அறிமுகமாகி இதுவரை 28 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான வருடத்திலேயே அதிக விக்கெட்களை எடுத்த இந்திய பவுலர் என்ற ஜஸ்பிரித் பும்ராவின் சாதனையும் சமன் செய்துள்ளார். அந்த பட்டியல்:
1. ஜஸ்பிரிட் பும்ரா : 28 (2016)
2. அர்ஷிதீப் சிங் : 28* (2022)

இதையும் படிங்க : சவாலான ஆஸி மண்ணில் சச்சினின் மெகா சாதனையை உடைத்த கிங் கோலி – உ.கோ வரலாற்றில் உலக சாதனை

இந்த உலக கோப்பையில் இன்னும் விளையாடுவார் என்பதால் பும்ராவின் இந்த சாதனையை அவர் உடைப்பார் என்று உறுதியாக நம்பலாம். மேலும் கடைசி நேரத்தில் பும்ரா காயத்தால் வெளியேறியதால் இந்திய ரசிகர்கள் கவலையடைந்த நிலையில் அவர் இல்லாத குறையை போக்கும் வகையில் அர்ஷ்தீப் அசத்தலாக செயல்பட்டு வருவது பாராட்டத்தக்கது.

Advertisement