இந்த வருஷத்துல மட்டும் இது 10 ஆவது முறை.. ரோஹித் சர்மா படைத்த மோசமான சாதனை – விவரம் இதோ

Rohit
- Advertisement -

அண்மையில் சொந்த மண்ணில் நடைபெற்று முடிந்த வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணியானது அடுத்ததாக நியூஸிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த முதலாவது டெஸ்ட் போட்டியானது நேற்று பெங்களூரு மைதானத்தில் துவங்க இருந்தது.

ரோஹித் சர்மா படைத்த மோசமான சாதனை :

ஆனால் நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் போது பெய்த கனமழை காரணமாக போட்டியின் முதல் நாளில் ஒரு பந்துகூட வீசப்படாமல் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை துவங்கிய இந்திய அணியானது டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது உணவு இடைவேளை வரை 34 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது துவக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா 16 பந்துகளை சந்தித்து வெறும் 2 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார்.

இந்த போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி சார்பாக ஒரு மோசமான சாதனையையும் அவர் நிகழ்த்தியுள்ளார். அந்த சாதனை யாதெனில் : இந்த நியூஸிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக பங்களாதேஷ் டெஸ்ட் தொடரில் விளையாடிய அவர் இன்னிங்ஸ்களில் வெறும் 42 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

- Advertisement -

இதனால் அவரது பேட்டிங் பார்மை இந்த தொடரில் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்நிலையில் இந்த போட்டியிலும் 2 ரன்களில் அவர் ஆட்டமிழந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம் இந்த ஆண்டு மட்டும் அதிக முறை ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறிய இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : சர்பராஸ் கானுக்கு பதிலா அந்த இடத்துல கே.எல் ராகுல் வந்திருக்கனும்.. ரோஹித் செய்த தவறு – விவரம் இதோ

இந்த ஆண்டு மட்டும் ரோகித் சர்மா 10 முறை ஒற்றை இலக்க ரன்களில் ஆட்மிழந்து வெளியேறியுள்ளார். மிக சிறப்பான கேப்டன் என்பது மட்டுமின்றி அதிரடியான வீரராக பார்க்கப்படும் ரோகித் சர்மா இப்படி தடுமாறி வருவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிக்கட்டத்தை நோக்கிச் செல்லும் வேளையில் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement