இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது நேற்று அக்டோபர் 16-ஆம் தேதி துவங்க இருந்தது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருந்தது. இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று இரண்டாவது நாள் ஆட்டம் துவங்கியது.
கேப்டன் ரோஹித் சர்மா செய்த தவறு :
இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் இந்திய அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். அதோடு சுப்மன் கில்லுக்கு கழுத்து பகுதியில் வலி இருப்பதால் அவருக்கு பதிலாக சர்ஃபாஸ் கானும், வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்புக்கு பதிலாக குல்தீப் யாதவும் விளையாடுவதாக இரண்டு மாற்றங்களை அறிவித்தார்.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சின் துவக்கத்திலேயே 10 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கேப்டன் ரோகித் சர்மா இரண்டு ரன்களிலும், விராட் கோலி மற்றும் சர்பராஸ் கான் ஆகியோர் டக் அவுட்டாகி வெளியேறினர்.
அதன் பின்னர் தற்போது யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் விளையாடி வருகின்றனர். இந்த போட்டியில் சுப்மன் கில் விளையாடாததால் பெங்களூரு மண்ணில் அதிகளவு போட்டிகளில் விளையாடிய பரிச்சயமான வீரரான விராட் கோலி மூன்றாவது இடத்தில் களம் இறங்கினார். அனுபவ வீரரான அவரே இந்த மைதானத்தின் சூழலில் கடினப்பட்டு ஆட்டமிழந்தார்.
அவ்வேளையில் நான்காவது இடத்தில் வெறும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடிய சர்பராஸ் கான் களம் இறக்கப்பட்டார். இதுதான் தவறான முடிவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் சர்பராஸ் கானை விடவும் அதிக அனுபவம் வாய்ந்தவரும் உள்ளூர் வீரருமான கேஎல் ராகுலை நான்காவது இடத்தில் களமிறங்கியிருக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க : தவறான ரோஹித் சர்மாவின் முடிவு.. 14, 8 வருடத்துக்கு பின் இந்தியா, விராட் கோலிக்கு நேர்ந்த பரிதாபம்
ஏனெனில் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததும் இந்திய அணியை நிலைநிறுத்த ஒரு அனுபவ வீரர் தேவைப்பட்ட வேளையில் வெறும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடிய சர்பராஸ் கான் நான்காவது இடத்தில் களமிறங்கியது தவறு. அவருக்கு பதிலாக கே.எல் ராகுல் இறங்கியிருந்தால் நிச்சயம் ஓரளவு இந்த சரிவை தடுத்திருக்கலாம். இருப்பினும் தற்போது ரிஷப் பண்ட் விளையாடி வரும் வேளையில் அடுத்ததாக கே.எல் ராகுல் களமிறங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.



