நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் கேப்டனாக விராட் கோலியின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் – ரோஹித் சர்மா

Rohit-and-Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது நாளை அக்டோபர் 16-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டுமெனில் இந்திய அணியானது இந்து தொடரின் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றினால் அது சாத்தியமாகும் என்பதனால் இந்த தொடர் அனைவரது மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விராட் கோலியை முத்த காத்திருக்கும் ரோஹித் சர்மா :

இந்நிலையில் இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட இருக்கும் ரோகித் சர்மா முன்னாள் கேப்டனான விராட் கோலியின் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடிக்கும் வாய்ப்பு அவரது கையில் காத்திருக்கிறது. அது குறித்து தகவலை இங்கு காணலாம்.

- Advertisement -

அதன்படி விராட் கோலி கேப்டனாக இருந்த காலத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரானது அறிமுகமாகியது. அந்த வகையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மட்டும் விராட் கோலி 22 போட்டிகளுக்கு இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளார். அதில் 14 வெற்றிகள், 7 தோல்வி, ஒரு டிரா என அவரது வெற்றி சதவீதம் 63.63 ஆக இருக்கிறது.

அதே சமயத்தில் இந்திய அணிக்காக அண்மையில் கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்சி செய்துவரும் ரோகித் சர்மா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை 18 போட்டிகளில் விளையாடி 12 வெற்றி மற்றும் நான்கு தோல்வி, இரண்டு டிரா என 66.66% வெற்றி சராசரியை தன்வசம் வைத்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் எதிர்வரும் இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் முற்றிலும் கைப்பற்றினால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 15 வெற்றிகளை பெற்ற இந்திய கேப்டனாக விராட் கோலியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஆஸ்திரேலியாவில் இருந்து ஆளை கூப்பிடாம.. இந்தியாவை பாத்து கத்துக்கோங்க.. பாகிஸ்தானை சாடிய பசித் அலி

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது நாளை அக்டோபர் 16-ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறயிருக்கிறது. இதன்காரணமாக பெங்களூரு வந்தடைந்த இரு அணி வீரர்களும் தற்போது இந்த போட்டிக்காக தீவிரமாக தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement