இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி துவங்குகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கும் வேளையில் தற்போது ரோகித் சர்மா தலைமையிலான 16 பேர் கொண்ட இந்திய அணி சென்னை வந்தடைந்து தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
புதிய சாதனைக்கு தயாராகும் ரோஹித் சர்மா :
இந்நிலையில் இந்த வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டு போட்டிகளில் விளையாட இருக்கும் கேப்டன் ரோஹித் சர்மா இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக்கின் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடிக்கும் வாய்ப்பினையும் பெற்றிருக்கிறார். அது குறித்த தகவலை இங்கு காணலாம்.
அதன்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற சாதனையில் தற்போது சேவாக் முதலிடத்தில் உள்ளார். இந்திய அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சேவாக் 178 இன்னிங்ஸ்களில் விளையாடி 90 சிக்ஸர்களை அடித்து அதிக சிக்ஸர்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இந்நிலையில் தற்போது 59 டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ள ரோஹித் சர்மா 101 இன்னிங்ஸ்களில் 84 சிக்சர்களை விளாசியுள்ளார். இந்த எதிர்வரும் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மேலும் சேவாக் 7 சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில் சேவாக்கை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடிக்க காத்திருக்கிறார்.
இவருக்கு இந்த பட்டியலில் சேவாக் 90 சிக்ஸர்களுடன் முதலிடத்திலும், ரோஹித் சர்மா 84 சிக்சருடன் இரண்டாவது இடத்தில் இருக்கும் வேளையில் மூன்றாவது இடத்தில் தல தோனி 78 சிக்ஸர் அடித்து மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து எப்போது ஓய்வு? தனது விருப்பம் என்ன என்பதை அறிவித்த – ரவிச்சந்திரன் அஷ்வின்
எதிர்வரும் இந்த சீசனில் மட்டும் இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள், நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 போட்டிகள், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.



