சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து எப்போது ஓய்வு? தனது விருப்பம் என்ன என்பதை அறிவித்த – ரவிச்சந்திரன் அஷ்வின்

Ashwin-IND
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வின் கடந்த 2010-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 100 டெஸ்ட் போட்டிகள், 116 ஒருநாள் போட்டிகள் மற்றும் 65 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அது தவிர்த்து ஐபிஎல் தொடரிலும் 212 போட்டிகளில் விளையாடிய அனுபவம் உடையவர்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எப்போது? :

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருக்கும் அஸ்வின் தற்போது சென்னையில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.

- Advertisement -

டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து அவர் ஓரம் கட்டப்பட்டாலும் தற்போது 37 வயதான அஸ்வின் இன்னும் சில ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடுவார் என்பது உறுதி. இந்திய அணி சார்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பட்டியலில் தற்போது அஸ்வின் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

விரைவில் அவர் அணில் கும்ப்ளேவின் சாதனையை முறியடிப்பார் என்று பலரும் பேசி வரும் வேளையில் தனது ஓய்வு குறித்தும், அணில் கும்ளேவின் சாதனை முறையடிப்பது குறித்தும் அஸ்வின் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : ஓய்வு குறித்து தற்போதைக்கு என் மனதில் எந்த நினைப்பும் இல்லை. ஏனென்றால் இன்றைய நாளில் மட்டுமே நான் வாழ விரும்புகிறேன். எதிர்காலத்தை கணக்கில் கொண்டது கிடையாது.

- Advertisement -

வயதாகும் போது கூடுதல் முயற்சியும் பயிற்சியும் தேவை. அந்த வகையில் நான் கடந்த மூன்று ஆண்டுகளாகவே அதிகமான முயற்சிகளையும் பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறேன். எனது ஓய்வு குறித்து இப்போதைக்கு நான் எதையும் யோசிக்கவில்லை. நிச்சயம் ஒருநாள் இது போதும் என்று தோன்றும் போது நான் ஓய்வு பெற்று விடுவேன்.

இதையும் படிங்க : தற்போதைய இந்தியாவின் மிகச்சிறந்த வீரர் என்றால் அது இவர்மட்டும் தான் – தமிழக வீரர் அஷ்வின் பாராட்டு

அணில் கும்ப்ளேவின் சாதனையை முறியடிப்பது குறித்து நான் யோசிக்கவில்லை. ஏனெனில் அவர் ஒரு மிகச் சிறந்த மனிதர். நான் அவருடன் இணைந்து விளையாடி இருக்கிறேன். நான் அவரை மிஞ்ச வேண்டும் என்ற எந்த இலக்கையும் வைத்துக் கொண்டதில்லை. ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன் என்னால் எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ அதுவரை செல்வேன் என அஷ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement