சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சினின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா – விவரம் இதோ

Rohit-and-Sachin
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கெதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணியானது நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி நாக்பூர் மைதானத்தில் துவங்குகிறது.

சச்சினை முந்த காத்திருக்கும் ரோஹித் சர்மா :

இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் அணிக்கு திரும்புவதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் சமீபகாலமாகவே பேட்டிங்கில் தடுமாற்றத்தை சந்தித்து வரும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முன்னாள் இந்திய வீரரான சச்சின் டெண்டுல்கரின் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடிக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். அது குறித்த விவரம் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அந்த வகையில் இந்திய அணிக்காக சச்சின் டெண்டுல்கர் விளையாடிய போது தனது 276-ஆவது இன்னிங்ஸில் ஒருநாள் கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்களை கடந்திருந்தார். இந்நிலையில் தற்போது 257 இன்னிங்ஸ்களுக்கு மட்டுமே விளையாடியுள்ள ரோகித் சர்மா 10866 ரன்களை குவித்துள்ளார். இதன் காரணமாக எதிர்வரும் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் அவர் 134 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் சச்சின் டெண்டுல்கரை விட விரைவாக 11,000 ரன்களை ஒருநாள் கிரிக்கெட்டில் அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார்.

- Advertisement -

இன்னும் இந்த சாதனை நிகழ்த்த ரோஹித் சர்மாவுக்கு 19 இன்னிங்ஸ்கள் எஞ்சியிருப்பதால் நிச்சயம் அவர் இந்த தொடரிலேயே இந்த சாதனையை முறியடிப்பார் என்று தெரிகிறது. உலக அளவில் ஒட்டுமொத்தமாக அதிவேகமாக 11,000 ரன்களை ஒருநாள் கிரிக்கெட்டில் வேகமாக கடந்த வீரர் என்ற பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். விராட் கோலி தனது 222-வது இன்னிங்ஸில் அந்த சாதனையை நிகழ்த்தி நம்பர் ஒன் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 1, 2ன்னா பரவால்ல.. 5மே இப்படின்னா எப்படி? சூரியகுமார், சாம்சன் இதை மாத்திக்கனும்.. அஸ்வின் பேட்டி

அதே போன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாற்றத்தை சந்தித்து வரும் ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற வேண்டும் என்று பலரும் கூறி வரும் நிலையில் இந்த இங்கிலாந்து தொடரும் அவருக்கு மோசமாக அமைந்தால் அவர் மீது அழுத்தமும் அதிகரிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement