இங்கிலாந்துக்கு எதிராக நிறைவு பெற்ற டி20 கிரிக்கெட் தொடரை 4 – 1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. அதனால் தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை மீண்டும் காண்பித்துள்ள இந்தியா உலக டி20 சாம்பியனுக்கு அடையாளமாக அசத்தியது. முன்னதாக அந்தத் தொடரில் கேப்டன் சூரியகுமார் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோருடைய பேட்டிங் சுமாராகவே இருந்தது.
குறிப்பாக சாம்சன் கடந்த தென்னாப்பிரிக்க தொடரில் சதத்தை அடித்து நல்ல ஃபார்மில் இருந்தாலும் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய ஷார்ட் பிட்ச் பந்துகளில் அவுட்டானார். அதே போல சூரியகுமார் பிளிக் ஷாட் அடிக்க முயற்சித்து தம்முடைய விக்கெட்டை இழந்தார். இந்நிலையில் சாம்சன், சூரியகுமார் ஆகிய இருவரும் 5 போட்டிகளிலும் ஒரே மாதிரியாக அவுட்டானதாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.
ஒன்னு ரெண்டுன்னா பரவால்ல:
எனவே நல்ல ஃபார்மில் இருந்தும் அதை வீணடிக்காமல் அசத்துவதற்கு அவர்கள் தங்களுடைய அணுகுமுறையை மாற்ற வேண்டும் என்று அஸ்வின் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சூர்யகுமாரின் கேப்டன்ஷிப் இந்தத் தொடரில் மிகவும் சிறப்பாக இருந்தது. ஆனால் மூச்சு விடும் அளவுக்கு அவர் தன்னுடைய பேட்டிங்கை அனுமதித்தார்”
“சஞ்சு சாம்சன் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் இந்தத் தொடர் முழுவதும் ஒரே பந்தில் ஒரே மாதிரியான ஃபீல்டிங்கில் ஒரே மாதிரியான ஷாட்டை அடித்து ஒரே தவறு செய்து ஒரே மாதிரியாக விக்கெட்டை இழந்தார்கள். ஓரிரு போட்டிகளில் நீங்கள் அவ்வாறு விக்கெட்டை இழப்பதை என்னால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் தொடர்ச்சியாக அவ்வாறு விளையாடுவதை இனிமேலும் ஏற்றுக் கொள்ள முடியாது”
அஸ்வின் கருத்து:
“வீரர்கள் சுதந்திரத்துடன் விளையாட வேண்டும். அதே சமயம் அதற்காக விளையாடும் விதத்தில் பேட்ஸ்மேன்கள் இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். குறிப்பாக சூரியகுமார் யாதவ் மிகவும் அனுபவமிக்க வீரர். அவரால் அனைத்து வகைகளிலும் பாதுகாப்பை கடந்து அடிக்க முடியும் என்று ஒருவர் சொல்ல முடியும். ஆனால் அவர் தன்னுடைய பேட்டிங் அணுகுமுறையை மாற்ற வேண்டிய நேரமாகும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: அபிஷேக் அடிச்சது சிறந்த சதம்.. காரணம் இது தான்.. கெயில், ஏபிடி மாதிரி வரலாம்.. மெக்கல்லம் பாராட்டு
இதைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. அந்தத் தொடரில் இருவருமே விளையாடப் போவதில்லை ரோகித் சர்மா தலைமையில் விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்களுடன் இந்தியா விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.