இங்கிலாந்துக்கு எதிராக நிறைவு பெற்ற டி20 கிரிக்கெட் தொடரை 4 – 1 என்ற கணக்கில் வென்ற இந்தியா தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை நிரூபித்தது. குறிப்பாக மும்பையில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் இங்கிலாந்தின் அடித்து நொறுக்கிய இந்தியா 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு அபிஷேக் ஷர்மா 135 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றினார்.
மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிகபட்ச ஸ்கோர் (135) பதிவு செய்து ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் (13) அடித்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் அவர் நிகழ்த்தினார். இந்நிலையில் பல்வேறு திட்டங்களைப் பின்பற்றி பவுலிங் செய்தும் தங்களுடைய தரமான பவுலர்களை அபிஷேக் சர்மா அடித்து நொறுக்கியதாக இங்கிலாந்து பயிற்சியாளர் ப்ரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.
மெக்கல்லம் பாராட்டு:
எனவே அது தாங்கள் பார்த்த சிறந்த சதங்களில் ஒன்று என்று தெரிவிக்கும் அவர் கிறிஸ் கெயில், ஏபி டீ வில்லியர்ஸ், பின்ச் போல அபிஷேக் ஷர்மா வரக்கூடும் என்று கணித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அனைத்திற்கும் முதலாக அபிஷேக் விளையாடியது நாங்கள் பார்த்த ஒரு மிகச்சிறந்த டி20 இன்னிங்ஸ் ஆகும்”
“அவர் சாதாரண பவுலர்களைக் கொண்ட அணியை அடிக்கவில்லை. மணிக்கு 90 மைல் வேகத்தில் வீசக்கூடிய 4 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் துப்பாக்கியை போன்ற லெக் ஸ்பின்னர் நிறைந்த அணியை அடித்துள்ளார். தொலைபேசி பெட்டியிலிருந்து வந்த அவர் அப்படியொரு ஆட்டத்தை விளையாடியதை நான் நிதர்சனமாக பார்க்கிறேன். சில நேரங்களில் நீங்கள் வெவ்வேறு திட்டங்களை வீசுவீர்கள்”
ஜாம்பவான்கள் போல:
“ஆனால் அவர் அப்படி அடித்தால் உங்களால் எந்தத் திட்டத்தையும் வைத்து நிறுத்த முடியாது. கிறிஸ் கெயில், ஏபி டீ வில்லியர்ஸ், ஆரோன் பின்ச் போன்ற குறிப்பிடத்தக்க வீரர்கள் கடந்தக் காலங்களில் அதைச் செய்ததை நாம் பார்த்துள்ளோம். ஒருவேளை அபிஷேக் ஷர்மாவும் அந்த வீரர்களில் ஒருவராக இருப்பதற்கு தன்னுடைய கையை உயர்த்துகிறார் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: ஒரே மணி நேரத்தில் முடிஞ்சிடுச்சி.. விக்கெட் விற்பனையிலேயே பரபரப்பை காட்டிய ரசிகர்கள் – அனல் பறக்கப்போகும் போட்டி
அந்த வகையில் அதிரடியாக விளையாடக்கூடிய அணுகுமுறையை கொண்ட மெக்கல்லம் பாராட்டும் அளவுக்கு அபிஷேக் ஷர்மா அசத்தினார் என்று சொல்லலாம். அபிஷேக், ஜெய்ஸ்வால் போன்ற வீரர்களால் இந்திய அணியின் வருங்காலமும் நல்ல நிலையில் இருக்கிறது என்றும் நம்பலாம். இதைத் தொடர்ந்து இந்தியா – இங்கிலாந்து அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.