ஒரே மணி நேரத்தில் முடிஞ்சிடுச்சி.. விக்கெட் விற்பனையிலேயே பரபரப்பை காட்டிய ரசிகர்கள் – அனல் பறக்கப்போகும் போட்டி

IND-PAK
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் எதிர்வரும் ஐசிசி சாம்பியன்ஸ் கிரிக்கெட் தொடரானது வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி துவங்க இருக்கிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரில் இறுதிவரை சென்று கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. அதோடு இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான மாற்றங்கள் ஏதேனும் இருந்தால் பிப்ரவரி 11-ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐ.சி.சி கேட்டுக்கொண்டுள்ளது.

ஒருமணி நேரத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள் :

இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தங்களுடைய முதல் போட்டியில் பிப்ரவரி 20-ஆம் தேதி வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. அதன் பிறகு பிப்ரவரி 23-ஆம் தேதி துபாய் மைதானத்தில் பாகிஸ்தான் அணி எதிர்கொள்ள இருக்கிறது. எப்போதுமே இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றால் ரசிகர்கள் மத்தியில் அது நிச்சயம் மிகப்பெரிய வரவேற்பை பெறும்.

- Advertisement -

அந்த வகையில் தற்போது நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்த போட்டியும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் கடைசியாக இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் மோதியது. அதற்கடுத்து கிட்டத்தட்ட 16 மாதங்கள் கழித்து மீண்டும் விளையாட இருக்கிறது.

இதன் காரணமாக இந்த போட்டியும் அனல் பறக்கும் போட்டியாக மாறப்போகுது நிச்சயம் என்று கூறலாம். அந்த வகையில் இந்த போட்டி போட்டிக்கான டிக்கெட் விற்பனை தற்போது மிகப்பெரிய சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளது. அதாவது துபாயில் நடைபெறவிருக்கும் மற்ற போட்டிகளுக்கான குறைந்த டிக்கெட் விலைமதிப்பு இந்திய மதிப்பில் 2500 ரூபாயாக இருந்து வருகிறது.

- Advertisement -

ஆனால் இந்தியா பாகிஸ்தான் விளையாடும் இந்த போட்டிக்கான குறைந்த பட்ச டிக்கெட் விலையே 4 மடங்கு அதிகரித்து 10 ஆயிரம் ரூபாயாக விற்கப்பட்டுள்ளது. அது தவிர்த்து அதிகபட்ச டிக்கெட் விலை 1,10,000 என்று நிர்ணயிக்கப்பட்டது. மேலும் டிக்கெட் விற்பனை ஆன்லைன் மட்டும் மைதானத்தில் நடைபெற்று வந்த வேளையில் டிக்கெட் விற்பனை துவங்கிய ஒரே மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டன என துபாய் கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : யாரையாவது நீக்கிட்டு வருண் சக்கரவர்த்திக்கு இந்த வாய்ப்பை குடுங்க – ரவிச்சந்திரன் அஷ்வின் கருத்து

இது குறித்த வெளியான தகவலில் : இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பித்த ஒரு மணி நேரத்திலேயே முற்றிலுமாக தீர்ந்துவிட்டது. அதிலும் குறிப்பாக 40 ரூபாய்க்கு டிக்கெட் மற்றும் 1 லட்சத்து 10 ஆயிரம் டிக்கெட் கூட ரசிகர்களால் அதிகளவு வாங்கப்பட்டது உண்மையிலேயே ஆச்சரியம் அளிக்கிறது எனத நிர்வாகம் கூறியுள்ளது.

Advertisement