டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா – சேவாக்கை முந்தவும் வாய்ப்பு

Rohit-Dhoni-Sehwag
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது ஆட்டமானது நாளை டிசம்பர் 26-ஆம் தேதி செஞ்சூரியன் நகரில் துவங்க இருக்கிறது. ஏற்கனவே இந்த சுற்றுப்பயணத்தில் டி20 தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்த இந்திய அணியானது ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

அதனை தொடர்ந்து தற்போது ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் பும்ரா போன்ற முன்னணி வீரர்கள் இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இணைந்துள்ளதால் இந்த டெஸ்ட் தொடரானது அனைவரது மத்தியிலும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரின் போது இந்திய அணியின் கேப்டனாக செயல்பட இருக்கும் ரோஹித் சர்மா சில முக்கிய சாதனைகளை தகர்க்க காத்திருக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் தற்போது தரமான வீரர்களை கொண்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி இந்த தொடரை கைப்பற்றும் பட்சத்தில் தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய முதல் கேப்டனாக ரோகித் சர்மா சாதனை படைப்பார்.

அதோடு மட்டுமின்றி தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியின் சாதனையும் ஒன்றிணையும் ரோகித் சர்மா முந்த காத்திருக்கிறார். அந்த வகையில் இதுவரை இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை அடித்தவர்களின் பட்டியலில் தோனி இரண்டாவது இடத்தில் உள்ளார்.

- Advertisement -

இந்திய அணிக்காக 144 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள தோனி 78 சிக்ஸர்களை விளாசியுள்ளார். அதே வேளையில் ரோகித் சர்மா வெறும் 88 இன்னிங்ஸ்களில் 77 சிக்ஸர்களை அடித்துள்ளார். இந்நிலையில் எதிர்வரும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேலும் இரண்டு சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில் அவர் தோனியை பின்னுக்குத் தள்ளி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை அடித்த இந்திய வீரராக இரண்டாம் இடத்தை பிடிப்பார்.

இதையும் படிங்க : இதெல்லாம் நல்லதாவே எனக்கு தோனல.. இந்திய அணி செய்த மிகப்பெரிய தவறை – சுட்டிக்காட்டிய பார்த்திவ் படேல்

அதோடு மேலும் இந்த தொடரில் ஒருவேளை அவர் 13 சிக்ஸர்களுக்கு மேல் விளாசினால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை அடித்த இந்திய வீரராக இருக்கும் சேவாக்கின் சாதனையையும் முறியடிப்பார். சேவாக் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 90 சிக்ஸர்களை விளாசி அதிக சிக்சர்களை டெஸ்ட் போட்டிகளில் அடித்த இந்திய வீரராக அந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement