- Advertisement -
இந்திய கிரிக்கெட்

முதல் சர்வதேச கேப்டனாக சாம்பியன்ஸ் டிராபியில் அசத்தல் சாதனை நிகழ்த்திய – ரோஹித் சர்மா

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதி போட்டியானது துபாய் மைதானத்தில் மார்ச் 9-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்களை குவித்தது.

ரோஹித் சர்மா நிகழ்த்திய வரலாற்று சாதனை :

நியூசிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக டேரல் மிட்சல் 63 ரன்களையும், மைக்கேல் பிரேஸ்வெல் 53 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்திய அணி சார்பாக குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். பின்னர் 252 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 49 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்திய அணி சார்பாக ரோகித் சர்மா 76 ரன்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 48 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியானது மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றி அசத்தியது.

இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 83 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 76 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் காரணமாக அவருக்கு இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதினை பெற்றதன் மூலம் சாம்பியன்ஸ் ட்ராபி வரலாற்றில் முதல் சர்வதேச கேப்டனாக ரோஹித் சர்மா மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் அவர் படைத்த சாதனை யாதனில் : இதுவரை நடைபெற்று முடிந்த 8 சீசன்களில் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் எந்த ஒரு கேப்டனும் ஆட்டநாயகன் விருதினை வென்றதில்லை. ஆனால் நேற்றைய போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியையும் வெற்றிக்கு அழைத்துச் சென்ற அவருக்கு ஆட்டநாயகன் விருந்து வழங்கப்பட்டது.

இதையும் படிங்க : இந்திய வீரர்களுக்கு பரிசாக வழங்கப்பட்ட வெள்ளை கோட் எதற்கு? அதன் பின்னால் இருக்கும் சுவாரசியம் என்ன?

இதன்மூலம் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருதோடு கோப்பையை கைப்பற்றிய முதல் கேப்டன் என்ற சாதனையை ரோகித் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -