நியூசிலாந்து அணிக்கு எதிராக மார்ச் 9-ஆம் தேதி துபாய் மைதானத்தில் நடைபெற்று முடிந்த நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய இந்திய அணியானது நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்றாம் முறையாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்று அசத்தியது.
வெள்ளை நிற கோட்டுக்கு பின்னால் இருக்கும் சுவாரசியம் :
இந்திய அணி பெற்ற இந்த வெற்றி ரசிகர்களையும் மகிழ்ச்சியடைய வைத்தது. இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்தே தோல்வியை சந்திக்காமல் வெற்றியை பெற்று வந்த இந்திய அணி இறுதிப் போட்டியிலும் நியூசிலாந்து அணியை வீழ்த்தி மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றிக்கு பிறகு ஐசிசி சார்பில் சாம்பியன்ஸ் கோப்பை அவர்களுக்கு வழங்கப்பட்டது.
அதற்கு முன்னதாக இந்திய வீரர்கள் கோப்பையை பெறுவதற்கு தயாராகும் வகையில் வெள்ளை நிற கோட் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது. இப்படி வெள்ளை நிற கோட்டை அணிந்து கொண்டு இந்திய வீரர்கள் கோபையை வாங்கி கொண்டாட என்ன காரணம்? என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அந்த வகையில் கடந்த 1998-முதல் சாம்பியன்ஸ் டிராபி தொடரானது நடபெற்று வந்தாலும் 2009-ஆம் ஆண்டு முதல் தான் இந்த வெள்ளை நிற ஜாக்கெட் அணியும் பழக்கம் உருவானது. முதல் முறையாக ஆஸ்திரேலிய அணிக்கு இந்த வெள்ளை நிற ஜாக்கெட்டை ஐசிசி பரிசளித்தது.
அந்த வெள்ளை நிற ஜாக்கெட் என்பது “வெற்றியாளர்களுக்கான ஒரு மரியாதை”, பின்னால் வரும் பல தலைமுறைகளுக்கு அது ஒரு முன்னுதாரணமாக இருப்பதற்காகவே தனித்துவமாக தெரிய வேண்டும் என்பதற்காக அந்த வெள்ளை நிற ஜாக்கெட் வழங்கப்பட்டது. அந்த வகையிலேயே தற்போது இந்திய அணிக்கும் இந்த பரிசு வழங்கப்பட்டது.
இதையும் படிங்க : பும்ரா இல்லாமையே ஜெய்க்க அவங்க தான் காரணம்.. உலகமே இப்போவாச்சும் இந்தியாவை பாருங்க.. அஸ்வின் சாடல்
அதன் பின்னர் கோப்பையும் வழங்கப்பட்டது. ஏற்கனவே தோனியின் தலைமையில் இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றிய போதும் இதே கவுரவம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



