இன்னைக்கும் டாசில் தோற்ற இந்திய அணி மோசமான சாதனை.. ரோஹித் சர்மாவுக்கு இப்படி ஒரு நிலையா?

IND vs NZ
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் 12-வது லீக் போட்டியானது இன்று துபாய் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் :

இந்திய அணி டாசில் நிகழ்த்திய மோசமான சாதனை :

9 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 79 ரன்களையும் ஹார்டிக் பாண்டியா 45 ரன்கள் குவித்தனர். நியூசிலாந்து அணி சார்பாக மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

பின்னர் தற்போது 250 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது டாசில் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது.

அந்த வகையில் இன்றைய போட்டியில் டாசில் தோற்றதின் மூலம் தொடர்ச்சியாக 13 போட்டிகளில் டாசில் தோல்வி பெற்ற அணியாக இந்திய அணி நெதர்லாந்து அணியின் மோசமான சாதனையை முந்தியுள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் டாசில் தோல்வியை சந்தித்த இந்திய அணி அதன் பிறகு ஒருநாள் போட்டிகளில் இதுவரை டாசில் வெற்றி பெறவில்லை.

- Advertisement -

இந்த 13 முறையில் ரோகித் சர்மா 10 முறை கேப்டனாக டாஸ் தோல்வியையும், கே.எல் ராகுல் மூன்று முறை டாஸ் தோல்வியையும் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியானது அடுத்ததாக அரையிறுதி போட்டியில் விளையாடவுள்ள வேளையில் அந்த போட்டியிலாவது இந்திய அணி டாசில் வெற்றி பெறுமா? என்ற கிண்டல் கூட சமூக வலைத்தளத்தில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 9 என்ற வித்யாச கொண்டாடத்தின் அர்த்தம் என்ன? இந்திய வாய்ப்பு என் கையில் இல்ல.. கருண் நாயர் பேட்டி

ஏற்கனவே கடந்த 2023-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலககோப்பை தொடரை இறுதிப்போட்டி வரை சென்று இழந்த இந்திய அணியானது இம்முறை சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பதாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement