9 என்ற வித்யாச கொண்டாடத்தின் அர்த்தம் என்ன? இந்திய வாய்ப்பு என் கையில் இல்ல.. கருண் நாயர் பேட்டி

Karun Nair
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் விளையாடுவதற்காக அனுபவ வீரர் கருண் நாயர் போராடி வருகிறார். கர்நாடகாவைச் சேர்ந்த அவர் 2016ஆம் ஆண்டு இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக முச்சதம் அடித்தார். அதனால் வீரந்திர சேவாக்கிற்கு நிகராக சாதனை படைத்த அவர் அதன் பின் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தவறியதால் 6 போட்டிகளுடன் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார்.

அதே போல 2 ஒருநாள் போட்டிகளிலும் இந்தியாவுக்காக விளையாடிய அவர் தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில் ஐபிஎல் தொடரிலும் சுமாராகவே விளையாடினார். அதன் காரணமாக இந்திய அணியில் இருந்து நிரந்தரமாக கழற்றி விடப்பட்ட கருண் நாயர் 2025 விஜய் ஹசாரே கோப்பையில் விதர்பா அணிக்காக 779 ரன்கள் குவித்து அசத்தினர். அத்துடன் ரஞ்சிக் கோப்பையிலும் விதர்பா அணிக்காக அவர் 860 ரன்கள் விளாசினார்.

- Advertisement -

9 என்பதன் அர்த்தம்:

குறிப்பாக கேரளாவுக்கு எதிராக நடைபெற்ற இறுதிப்போட்டியில் சதத்தை அடித்த அவர் 132 ரன்கள் குவித்து விதர்பா அணி கோப்பையை வெல்ல உதவினார். முன்னதாக அந்தப் போட்டியில் சதத்தை அடித்த போது 9 விரல்களை காட்டி கருணா நாயர் வித்தியாசமாக கொண்டாடியது ரசிகர்களை ஈர்த்தது. இந்திய அணியில் தமக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று பிசிசிஐக்கு கோரிக்கை வைக்கும் வகையிலேயே அவர் அப்படி வித்தியாசமாக கொண்டாடியதாக ரசிகர்கள் நம்பினர்.

இந்நிலையில் நடப்பு சீசனில் ஒன்பதாவது சதத்தை அடித்ததை குறிக்கும் நோக்கிலேயே அப்படி வித்தியாசமாக கொண்டாடியதாக கருண் நாயர் தெரிவித்துள்ளார். மேலும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பது தன்னுடைய கையில் இல்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இந்திய அணியில் வாய்ப்பு கேட்பதற்கு நான் சரியான நபர் கிடையாது”

- Advertisement -

வாய்ப்பு கையில் இல்லை:

“அதைப் பற்றி நான் கருத்தும் சொல்ல முடியாது. ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாடி நடப்பது நடக்கட்டும் என்ற எண்ணத்துடன் காத்திருக்க வேண்டும் என்று மட்டுமே என்னால் சொல்ல முடியும். நான் என்னுடைய சிறந்த வேலையை செய்கிறேன். ஏற்கனவே 8 சதங்கள் அடித்துள்ள நான் இந்தப் போட்டியில் சதத்தை அடித்தால் 9 என்று காட்டலாம் என முடிவு செய்து வைத்திருந்தேன்”

இதையும் படிங்க: பாபர் அசாமுடன் ஒப்பிடும் போது விராட் கோலி ஜீரோ.. மோசின் கான் போகுற போக்கில் உருட்டல் பேட்டி

“குறிப்பாக எங்களுடைய பவுலிங் துணைப் பயிற்சியாளர் யாஷ் த்ரோட் அவர்களிடம் ஃபைனலில் சதத்தை அடித்தால் 9 என்று நான் காண்பிப்பேன் என்று கூறியிருந்தேன் அதைத் தான் செய்தேன்” என்று தெரிவித்தார். மொத்தத்தில் ரஞ்சிக் கோப்பையில் சிறப்பாக விளையாடியதன் காரணமாக வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் கருண் நாயர் தேர்வு செய்யப்படுவதற்கு வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement