இந்திய டெஸ்ட் அணியில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் துவக்க வீரராக விளையாட இதுதான் காரணம் – ரோஹித் சர்மா பேட்டி

Rohit-and-Jaiswal
- Advertisement -

இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட் துவக்க வீரராக இடம் மாறியதிலிருந்து ஷிகர் தவான், கே.எல் ராகுல், விராட் கோலி, சுப்மன் கில் என பல்வேறு வீரர்களுடன் துவக்க வீரராக களமிறங்கி விளையாடியிருக்கிறார். இந்நிலையில் கடந்த சில தொடர்களாகவே இளம் வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்து விளையாடி வருகிறார். அவர்கள் இருவரது கூட்டணி டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது மிகச் சிறப்பான செயல்பாட்டையே வெளிப்படுத்தி வருகிறது.

ஜெய்ஸ்வால் துவக்க வீரராக விளையாடுவது இதற்காகத்தான் :

எதிர்வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் அவர்களது ஜோடியே துவக்க வீரர்களாக விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ரோகித் சர்மா துவக்க வீரராக ஜெயஷ்வாலுடன் இணைந்து விளையாடுவது குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இளம் வீரரான ஜெய்ஸ்வால் உண்மையிலேயே மிகவும் திறமை வாய்ந்த வீரர். எந்த சூழ்நிலையிலும் சிறப்பாக விளையாடக்கூடிய திறமை அவரிடம் உள்ளது. தற்போது தான் அவர் சர்வதேச கிரிக்கெட்டிற்கு அறிமுகமாகி விளையாடி வந்தாலும் சிறந்த பேட்ஸ்மேனுக்கான எல்லா தகுதியும் அவரிடம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

இதன் காரணமாகவே அவர் என்னுடன் துவக்க வீரராக களமிறங்கி விளையாடி வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் போட்டியின் சுழல் எவ்வாறு செல்கிறதோ? அதை பார்த்தே எங்களது அணுகுமுறையை நாங்கள் கடந்த சில தொடர்களாக செயல்படுத்தி வருகிறோம்.

- Advertisement -

அந்த வகையில் கான்பூர் டெஸ்டின் இரண்டு நாட்கள் மழையால் பாதிக்கப்பட்டதால் அதிரடியாக விளையாடிய அந்த ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்தோம். இந்நிலையில் தற்போது பெங்களூர் நகரில் மழை பெய்து வருவதால் முதல் டெஸ்ட் போட்டி எவ்வாறு செல்லும் என்று தெரியவில்லை. எனவே போட்டியின் நாட்கள் எவ்வாறு செல்கிறது என்பதை பொறுத்து எங்களது அணுகுமுறை மாறும்.

இதையும் படிங்க : நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் கேப்டனாக விராட் கோலியின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் – ரோஹித் சர்மா

இருப்பினும் இந்த போட்டியிலும் நாங்கள் வெற்றி பெறவே முயற்சிப்போம் என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது நாளை அக்டோபர் 16-ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement