- Advertisement -
இந்திய கிரிக்கெட்

IND vs SL : அவரோட இந்த பார்ம் இந்திய அணிக்கு மிகப்பெரிய ஸ்ட்ரென்த் – வெற்றி குறித்து ரோஹித் சர்மா பேட்டி

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி இலங்கை அணியை 67 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்திருந்த வேளையில் அடுத்ததாக நேற்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 39.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்கள் மட்டுமே குவித்தது. இந்திய அணி சார்பாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 216 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 43.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் குவித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக கே.எல் ராகுல் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 64 ரன்கள் குவித்து அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : இது போன்ற போட்டிகள் நமக்கு நல்ல பாடத்தை கற்றுத் தரும். ஏனெனில் சிறிய இலக்கை துறத்தும் போது நமது அணி விக்கெட்டை இழந்து இழந்தாலும் ஒரு அழுத்தமான சூழ்நிலையில் பின் வரிசையில் விளையாடிய வீரர்கள் அணி சிறப்பாக வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக கே.எல் ராகுல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 5-வது இடத்தில் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வருகிறார். அவரது இந்த பிரமாதமான ஆட்டம் அணிக்கு மேலும் பலத்தை தருகிறது. அவர் இப்படி விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் போது அணியின் பின்வரிசையும் பலமாக தென்படுகிறது. அவரது இந்த பார்ம் டாப் ஆர்டரில் விளையாடும் வீரர்களுக்கு இன்னும் நம்பிக்கையை தரும்.

இதையும் படிங்க : 2016லயே தோனியுடம் ஒய்ட் பால் கேப்டன்சியை கேட்ட விராட் கோலியை அவர் தான் தடுத்தாரு – ஸ்ரீதர் திடுக்கிடும் தகவல்

இந்த போட்டியில் இந்திய அணி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியதாக நினைக்கிறேன். இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் வரும் வெற்றி அணி வீரர்களுக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளிக்கும். அந்த வகையில் இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றது மகிழ்ச்சி என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by