நாங்க ஜெயிச்சிருந்தாலும் கடைசி 5-6 மேட்ச்சா அந்த தப்பு நடந்துக்கிட்டே தான் இருக்கு – ஒப்புக்கொண்ட ரோஹித்

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரண்டாவது போட்டியானது நேற்று கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸில் வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்க அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 61 ரன்களையும், ராகுல் 57 ரன்களையும் குவித்து அசத்தினர்.

INDvsRSA-Toss

பின்னர் 238 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது மிகச் சிறப்பான போராட்டத்தை அளித்து 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் குவித்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் 106 ரன்கள் அடித்து அசத்தினார். அவருடன் துவக்க வீரரான குவிண்டன் டீ காக் 69 ரன்கள் குவித்து இருந்தார்.

- Advertisement -

இந்த போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணியானது இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் :

David Miller IND vs Sa

பேட்டிங் யூனிட்டாக இந்த போட்டியில் நாங்கள் அனைவரும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். இந்திய அணி எதை விரும்பியதோ அதை இந்த போட்டியில் செய்துள்ளோம். கடந்த எட்டு முதல் பத்து மாதங்களாக நமது அணி வீரர்களின் பேட்டிங் மிகச் சிறப்பாக இருக்கிறது. ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு போட்டியில் தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர்.

- Advertisement -

நிச்சயம் கடந்த சில மாதங்களாகவே விளையாடிய போட்டிகளின் மூலம் நல்ல அனுபவத்தை நமது அணி பெற்றுள்ளது. ஆனால் பந்துவீச்சில் இந்திய அணி இன்னும் முன்னேற்றத்தை காண்பிக்க வேண்டியது அவசியம். கடந்த நான்கு – ஐந்து போட்டிகளாகவே டெத் ஓவரில் நமது அணி சரியாக பந்து வீசவில்லை அதை ஒப்புக்கொண்டுத்தான் ஆக வேண்டும்.

இதையும் படிங்க : சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2 வெவ்வேறு நாடுகளுக்காக விளையாடிய 5 வீரர்களின் பட்டியல்

பேட்டிங்காக இருந்தாலும் சரி, பவுலிங்காக இருந்தாலும் சரி இறுதி கட்ட ஓவர்களில் சரியாக செயல்படுவது மிக கடினம் தான். ஆனாலும் போட்டியின் முடிவை தீர்மானிப்பதும் அந்த இறுதி கட்ட ஓவர்கள்தான் எனவே டெத் ஓவர்களில் இன்னும் கூடுதலான கவனத்தை செலுத்த விரும்புகிறோம் என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement