- Advertisement -
இந்திய கிரிக்கெட்

உலககோப்பை முதல் போட்டியில் நாங்க பெற்ற வெற்றிக்கு காரணம் அவர்தான் – ரோஹித் சர்மா பாராட்டு

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான நடப்பு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் குரூப் ஏ போட்டியானது நேற்று நியூயார்க் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஸ்டெர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து முதலில் விளையாடிய அயர்லாந்து அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 16 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி சார்பாக ஹார்டிக் பாண்டியா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து 97 ரன்கள் அடித்தால் வெற்றி என் இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 12.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 97 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக ரோஹித் சர்மா 52 ரன்களையும், ரிஷப் பண்ட் 36 ரன்களையும் குவித்து அசத்தினர்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : இந்த மைதானம் நாங்கள் நினைத்த மாதிரி இல்லை. முதல் இன்னிங்ஸ்ஸின் போது எவ்வாறு இருந்ததோ அதேபோன்று நாங்கள் பேட்டிங் செய்யும்போதும் பிட்ச் பந்துவீச்சுக்கு சாதகமாக தான் இருந்தது.

- Advertisement -

இருந்தாலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று விட்டோம். இந்த போட்டியில் எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் சரியான லென்த்தில் பந்துகளை வீசினர். அதிலும் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை விளையாடாத அர்ஷ்தீப் சிங் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி போட்டியின் ஆரம்பத்திலேயே இரண்டு விக்கெட்டை எடுத்து எங்களுக்கு நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார். அதன் பின்னர் மற்ற பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட அவர்களை எளிதாக நிறுத்த முடிந்தது.

இதையும் படிங்க : 52 ரன்ஸ்.. எம்எஸ் தோனியின் வாழ்நாள் சாதனையை உடைத்த ஹிட்மேன்.. கிங் கோலியையும் முந்தி 3 சாதனை

இந்த மைதானம் இனிவரும் போட்டிகளில் எவ்வாறு செயல்படும் என்பதை உண்மையிலேயே என்னால் கணிக்க முடியவில்லை. அடுத்து பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இதே மைதானத்தில் விளையாட இருப்பதால் நிறைய தயாராக வேண்டியுள்ளது. இந்திய அணியின் பிளேயிங் லெவன் மைதானத்தின் தன்மையை பொறுத்தே அமையும் என்று ரோஹித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -