IND vs AUS : ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 2 ஆவது டி20 போட்டியின் வெற்றிக்கு பின்னர் – ரோஹித் பேசியது என்ன?

Rohit
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த தொடரில் நடைபெற்ற முதல் போட்டியில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை வீழ்த்தியிருந்ததன் காரணமாக இரண்டாவது டி20 போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் நேற்று இந்திய அணி களமிறங்கியது. அப்படி நாக்பூர் மைதானத்தில் நேற்று நடைபெற இருந்த இந்த போட்டி மழை காரணமாக தாமதமாக துவங்கியது.

INDvsAUS

- Advertisement -

அதன் காரணமாக நேற்றைய இரண்டாவது டி20 போட்டியானது 8 ஓவர் வரை மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 8 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 90 ரன்கள் குவித்தது.

பின்னர் 91 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 7.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 92 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ரோஹித் சர்மா கூறுகையில் : என்னுடைய பேட்டிங்கை கண்டு இன்று நானே சர்ப்ரைஸாக இருக்கிறேன். இந்த அளவிற்கு சிறப்பாக விளையாட முடியும் என்று நான் நினைக்கவில்லை.

ஆனாலும் கடந்த ஏழு – எட்டு மாதங்களாக நான் இதேபோன்று விளையாட வேண்டும் என்று நினைத்து தான் விளையாடி வருகிறேன். டி20 போட்டிகளை பொருத்தவரை முன்கூட்டியே எதையும் அதிகமாக பிளான் செய்ய முடியாது. களத்தில் இருக்கும் சூழ்நிலைகளைக்கு ஏற்ப நாம் செயல்பட்டாக வேண்டியது அவசியம். அந்த வகையில் இந்த போட்டியில் இந்திய அணியின் பவுலர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசினர்.

- Advertisement -

ஆனாலும் மைதானத்தில் தாமதமாக வந்த டியூ காரணமாக ஹர்ஷல் பட்டேல் சில ஃபுல்டாஸ் பந்துகளை வீசினார். ஆனால் அதைப்பற்றி பெரிதாக யோசிக்க தேவையில்லை. காயத்திற்கு பிறகு மீண்டு வந்து பந்து வீசுவது சற்று சிரமமான ஒன்றுதான். ஆனாலும் அவர் சிறப்பாகவே பந்து வீசி வருகிறார்.

இதையும் படிங்க : ஜடேஜாவுக்கு கொக்கி போட்ட அணிகள், ஐபிஎல் 2023 தொடருக்கான ஏல தேதி எப்போது – வெளியான புதிய தகவல் இதோ

அதேபோன்று அக்சர் பட்டேல் போட்டியின் எந்த நேரத்திலும் பந்துவீச தயாராக இருக்கிறார். அவர் இருப்பது எனக்கு பவுலர்களை வெவ்வேறு இடங்களில் பந்துவீச வைக்க ஒரு வாய்ப்பை தருகிறது. அவர் பேட்டிங்கிலும் சிறப்பாகவே செயல்படுகிறார். இந்த போட்டியை தினேஷ் கார்த்திக் இறுதியில் வெற்றிகரமாக முடித்துக் கொடுத்ததில் மகிழ்ச்சி என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement