ஜடேஜாவுக்கு கொக்கி போட்ட அணிகள், ஐபிஎல் 2023 தொடருக்கான ஏல தேதி எப்போது – வெளியான புதிய தகவல் இதோ

CSK MS Dhoni Ravindra Jadeja
- Advertisement -

உலகப் புகழ்பெற்ற ஐபிஎல் தொடரின் 16வது சீசனை வெற்றிகரமாக நடத்துவதற்கான வேலைகளை பிசிசிஐ இப்போதே துவக்கியுள்ளது. கடந்த 2008இல் 8 அணிகளுடன் சாதாரண டி20 தொடராக துவங்கப்பட்ட ஐபிஎல் கடந்த 15 வருடங்களில் பல பரிணாமங்களை கடந்து இன்று உலகின் நம்பர் ஒன் டி20 தொடராக உருவெடுத்துள்ளது. இதில் நடைபெறும் பெரும்பாலான போட்டிகள் கடைசி ஓவர் வரை சென்று திரில்லர் விருந்து படைப்பதால் ஐசிசி நடத்தும் உலக கோப்பைகளை மிஞ்சியுள்ள ஐபிஎல் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான கோடிகளை வருமானமாக கொடுத்து வருகிறது. அதனால் ஐசிசியை மிஞ்சி உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாக உருவெடுத்துள்ள பிசிசிஐ இந்த வருடம் ஐபிஎல் தொடரை 10 அணிகளாக 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட தொடராக விரிவுபடுத்தியது.

- Advertisement -

அதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 2 நாட்கள் நடைபெற்ற மெகா ஏலத்தில் தேவையான வீரர்களை வாங்கி களமிறங்கிய 10 அணிகளில் வெற்றிகரமான அணிகளான சென்னையும் மும்பையும் தொடர் தோல்விகளை சந்தித்து புள்ளிப்பட்டியல் கடைசி இடங்களை பிடித்து ஆரம்பத்திலேயே வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. மறுபுறம் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ஹர்திக் பாண்டியா தலைமையில் ஆரம்பம் முதலே மிரட்டிய குஜராத் முதல் வருடத்திலேயே கோப்பையை வென்றது ஆச்சரியமாக அமைந்தது.

ஐபிஎல் ஏலம்:
அப்படி வெற்றிகரமாக நடந்த ஐபிஎல் தொடரின் 2023 – 2027 காலகட்டதிற்கான ஒளிபரப்பு ஏலம் சமீபத்தில் 43,000+ கோடிக்கு ஏலம் போனதை அடுத்து 2025 முதல் 84, 94 போட்டிகளாக ஐபிஎல் தொடரை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ள பிசிசிஐ அதற்காக ஐசிசி கால அட்டவணையில் மாற்றங்களை செய்வதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் 2023இல் வழக்கம்போல 10 அணிகளுடன் 74 போட்டிகளுடன் நடைபெறும் ஐபிஎல் தொடருக்கான ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளதாக புதிய செய்திகள் வெளியாகியுள்ளது.

IPL

1. இந்த வருடம் அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடைபெற்றதால் 2023 சீசனுக்காக மினி ஏலத்தை மட்டும் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அந்த ஏலம் வரும் டிசம்பர் 16ஆம் தேதியன்று நடைபெறும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

2. அதற்கு முன்பாக ஒப்பந்த அடிப்படையில் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகள் வெளியிட விரும்பும் வீரர்களை விடுவிக்கவும் தேவைப்படும் வீரர்களை மற்ற அணிகளுடன் பேசி வாங்குவதற்கான “ட்ரேடிங் விண்டோ” முறையை ஐபிஎல் நிர்வாகம் ஆரம்பித்துள்ளது.

Jadeja

3. அந நிலையில் இந்த வருடம் தேவையின்றி கேப்டன்ஷிப் பொறுப்பை வழங்கி அதில் பார்மை இழந்து காயத்தால் வெளியேறிய ரவீந்திர ஜடேஜா சென்னை அணியிலிருந்து விலகப்போவதாக சமீப காலங்களாக செய்திகள் வெளியாகின. அதற்கேற்றார்போல் சென்னை அணியுடன் சம்பந்தப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீக்கிய ஜடேஜா வரும் சீசனில் வேறு அணிக்கு விளையாட முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வந்தன.

- Advertisement -

4. இந்நிலையில் 2023 சீசனில் தங்களது அணிக்காக ஒப்பந்த அடிப்படையில் விளையாட ரவீந்திர ஜடேஜாவை கொடுக்குமாறு டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்வாகம் கோரிக்கை வைத்ததாக தற்போது வெளியாகியுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் அதை மறுத்த சென்னை நிர்வாகம் ஜடேஜாவை யாருக்கும் கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாக தெரிகிறது. இதனால் வரும் சீசனில் சென்னைக்கு ஜடேஜா விளையாடுவது உறுதியானதை தெரிந்து சென்னை ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

Tewatia 1

5. அதேபோல் முதல் வருடமே கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக அமைந்த ராகுல் திவாடியா மற்றும் சாய் கிசோர் ஆகியோரை டிரேடிங் விண்டோ வாயிலாக தங்களது அணிக்கு வாங்க குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் சில அணிகள் கோரிக்கை வைத்ததாகவும் அதை அந்த அணி மறுத்து விட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கிறது.

6. அதைவிட ஏற்கனவே ஒவ்வொரு அணிக்கும் அடிப்படை ஏலத்தொகை 90 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது 5 கோடி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் ஏலத்தில் ஒவ்வொரு அணியும் 95 கோடிகளுடன் வீரர்களை வாங்குவதற்கு களமிறங்க உள்ளது.

CSK-fans

7. மேலும் 2022 சீசன் போல் அல்லாமல் ஐபிஎல் 2023 தொடர் வழக்கம் போல சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ஒரு அணி சொந்த மண் – எதிரணி மண்ணில் விளையாடும் பழைய முறை மீண்டும் கொண்டு வரப்பட உள்ளது. எடுத்துக்காட்டாக சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் 7 போட்டிகளையும் எதிரணியின் மைதானங்களில் 7 போட்டிகளையும் விளையாட உள்ளது.

Advertisement