சூரியகுமார் யாதவிற்கு அறிமுக வாய்ப்பினை வழங்கியது ஏன்? போட்டிக்கு முன்னரே விளக்கத்தை சொன்ன – ரோஹித் சர்மா

Rohit-and-SKY
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியானது இன்று பிப்ரவரி 9-ஆம் தேதி நாக்பூர் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தற்போது ஆஸ்திரேலிய அணியானது முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக சூரியகுமார் யாதவ் மற்றும் கே.எஸ் பரத் ஆகிய இருவரும் அறிமுக வீரர்களாக களமிறங்கியுள்ளனர்.

KS Bharat

- Advertisement -

இந்த போட்டிக்கு முன்னதாக இவர்கள் இருவருக்கும் அறிமுக டெஸ்ட் தொப்பி வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது. கே.எஸ் பரத்திற்கு இந்திய அணியின் சீனியர் வீரரான புஜாராவும், சூரியகுமார் யாதவிற்கு ரவி சாஸ்திரியும் அறிமுக தொப்பையை வழங்கினர். இந்நிலையில் இந்த போட்டியில் கே.எல் ராகுல் மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரில் யார் துவக்க வீரராக களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்த்த வேளையில் கே.எல் ராகுல் ஓப்பனிங் செய்வார் என்று ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் மிடில் ஆர்டரில் ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விலகியுள்ளதால் அவருக்கு பதிலாக யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி சுப்மன் கில் தான் அந்த இடத்தை நிரப்புவார் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் சூரியகுமார் யாதவிற்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Suryakumar-Yadav

இந்நிலையில் இப்படி சூரியகுமார் யாதவுக்கு சுப்மன் கில்லை தாண்டி வாய்ப்பு கொடுத்தது ஏன் என்பது குறித்து போட்டிக்கு முன்னதாகவே ரோஹித் சர்மா சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அது குறித்து அவர் கூறுகையில் : சுப்மன் கில் நல்ல பார்மில் இருக்கிறார். அதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. ஆனால் மிடில் ஆர்டரில் அவரை விளையாட வைப்பது எந்த அளவு சரியாக இருக்கும் என்று தெரியவில்லை.

- Advertisement -

அதேவேளையில் சூரியகுமார் யாதவுக்கு இது அறிமுகத் தொடர். அவர் இந்திய மண்ணில் ஏகப்பட்ட அனுபவங்களை கொண்டிருக்கிறார். டி20 போட்டிகளிலும் மிகச் சிறப்பாக விளையாடும் அவர் இந்த டெஸ்ட் தொடரிலும் தனது பார்மை தொடர்வார் என்று நினைக்கிறேன் என்று கூறியிருந்தார். மேலும் டாசுக்கு முன்னர் பேசிய ரோஹித் சர்மா கூறுகையில் : சூரியகுமார் யாதவ் பிளேயிங் லெவனில் இருக்கிறார்.

இதையும் படிங்க : வீடியோ : இடத்தை மாத்துங்க, மீண்டும் முக்கிய கேட்ச்சை தவறவிட்ட விராட் கோலி – ரசிகர்கள் கோபம்

மைதானத்தின் கண்டிஷனை வைத்து பார்க்கையில் ஸ்பின்னர்களுக்கு நல்ல சாதகம் இருக்கும் என்று தெரிகிறது. ஆகையாலே இந்த மாற்றத்தை செய்திருக்கிறோம் என்று தெரிவித்திருந்தார். வழக்கமாகவே ஸ்பின்னர்களுக்கு எதிராக ஸ்வீப் ஷாட் மிகச் சிறப்பாக விளையாடும் சூரியகுமார் யாதவ் இந்திய மண்ணில் பல ஆண்டுகாலம் அனுபவமிக்கவர் என்பதாலும் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Advertisement