இனிமே இந்த விஷயத்துல நம்ம இன்னும் பாசிட்டிவ்வா விளையாடனும் – வீரர்களுக்கு அறிவுரை வழங்கிய ரோஹித் சர்மா

Rohith-2
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்ற இந்திய அணியானது இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் இன்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 247 ரன்களை துரத்த முடியாமல் இந்திய அணி தோல்வியை சந்தித்து இந்த தொடரை தற்போது ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

Reece Topley 1

- Advertisement -

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த இரண்டாவது போட்டியில் முதலாவதாக விளையாடிய இங்கிலாந்து அணி ஒரு வழியாக தட்டு தடுமாறு 246 ரன்களை குவித்தது. பின்னர் 247 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்கினை துரத்திய இந்திய அணி 146 ரன்களை மட்டுமே குவித்ததால் 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி சார்பாக ரீஸ் டோப்லே மற்றும் டேவிட் வில்லி ஆகியோர் சிறப்பாக பந்து வீசினார்கள். இந்நிலையில் இந்த சிறிய இலக்கினை துரத்த முடியாமல் இந்திய அணி தோற்றதிற்கு டாப் ஆர்டரில் விளையாடிய வீரர்கள் விரைவாகவே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது காரணமாக பார்க்கப்படுகிறது.

Rohit and Dhawan

இந்நிலையில் இது போன்ற எளிய சேசிங்கில் இந்திய அணி தங்களது மைண்ட் செட்டை மாற்றியாக வேண்டும் என கேப்டன் ரோகித் வீரர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : இதுபோன்று இந்திய அணி எளிதான இலக்கை துரத்தும்போது தோற்பது முதல் முறை கிடையாது. ஏற்கனவே 2019-ல் உலகக்கோப்பை அரை இறுதி போட்டியில் இதே போன்ற நிகழ்வு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

அதுமட்டும் இன்றி சாம்பியன்ஸ் டிராபியிலும் நாம் இதுபோன்ற தோல்வியை சந்தித்துள்ளோம். போட்டியின் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தால் சிறிய இலக்காக இருந்தால் கூட துரத்துவது கடினம். எனவே இனிவரும் போட்டிகளில் இந்திய அணியின் வீரர்கள் மனநிலையை சற்று மாற்றிக்கொண்டு எளிதாக இலக்கு என்றாலும் அதனை பாசிட்டிவாக எடுத்து விரைவாக ரன்களை சேர்த்து வெற்றி பெற முயல வேண்டும்.

இதையும் படிங்க : 2014 மாதிரி விராட் கோலியை பார்முக்கு கொண்டுவர உங்களால் தான் முடியும் – சச்சினுக்கு முன்னாள் வீரர் கோரிக்கை

மேலும் இனிவரும் போட்டிகளில் இலக்கு என்னவாக இருந்தாலும் நமது ஆட்டத்தின் மீது முழு ஃபோகஸை வைத்து அணியின் வெற்றிக்கு நாம் செல்ல வேண்டும் என ரோகித் சர்மா கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement