இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை மற்றும் இந்த ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கோப்பை என இரண்டு ஐசிசி கோப்பைகளை அடுத்தடுத்து இந்திய அணிக்கு பெற்றுக் கொடுத்து தோனிக்கு அடுத்து மிகச்சிறந்த கேப்டனாக தனது பெயரை நிலைநாட்டியுள்ளார். டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக விளையாடி வரும் அவர் இன்னும் சில ஐசிசி கோப்பைகளை குறிவைத்து செயல்பட்டு வருவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இப்படி ஒரு கவுரவம் கிடைத்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி : ரோஹித் சர்மா
இந்நிலையில் இந்திய அணிக்காக இத்தனை ஆண்டு காலம் சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் அவரை கௌரவிக்கும் வகையில் மும்பை கிரிக்கெட் வாரியமானது வான்கடே மைதானத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு ரோகித் சர்மாவின் பெயரை சூட்டி கௌரவம் செய்துள்ளது.
ஏற்கனவே மும்பை வீரர்களான சச்சின் டெண்டுல்கர், திலீப் வெங்சர்க்கார், சுனில் கவாஸ்கர் போன்ற ஒரு சில வீரர்களின் பெயர் அந்த மைதானத்தில் சூட்டப்பட்டு இருந்த வேளையில் தற்போது ரோகித் சர்மாவிற்கும் அந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. இப்படி வான்கடே மைதானத்தில் ஒரு ஸ்டாண்டிற்கு தனது பெயரை சூட்டியிருக்கும் இந்த விடயம் குறித்து நன்றி தெரிவித்துள்ள ரோஹித் சர்மா கூறுகையில் :
இப்படி ஒரு விடயம் நடக்கும் என்று நான் கனவில் கூட நினைத்தது கிடையாது. இங்கு நான் விளையாடிய முதல் போட்டி எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. அதனை தொடர்ந்து இத்தனை ஆண்டுகள் கழித்து தற்போது என்னுடைய பெயர் இந்த மைதானத்தில் சூட்டப்படுவதை நம்ப முடியவில்லை. வான்கடே மைதானம் புணரமைக்கப்பட்ட பின் இங்குதான் உலகக் கோப்பையை இந்திய அணி வென்றிருந்தது.
அதேபோன்று பல போட்டிகளில் இந்த மைதானத்தில் இந்திய அணி விளையாடியுள்ளது. நானும் எத்தனையோ போட்டிகளில் இங்கு விளையாடி உள்ளேன். தற்போது என்னுடைய பெயரை ஒரு ஸ்டாண்டுக்கு சூட்டிய பின்னர் இந்த மைதானத்தில் விளையாட இருப்பதை நினைக்கும் போது நம்ப முடியாத ஒரு உணர்வாக இருக்கிறது. எனக்கு இந்த கௌரவத்தை வழங்கிய நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி.
இதையும் படிங்க : டெல்லி அணியின் பவுலிங் கோச் முனாப் படேலுக்கு 25% அபராதம் போட்டு 2 தண்டனை வழங்கிய பிசிசிஐ.. காரணம் என்ன?
நான் முதன் முதலாக கிரிக்கெட் விளையாடும் போது இவ்வளவு தூரம் வருவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. சாதாரண வீரராக வந்து தற்போது இந்த மைதானத்திலேயே எனக்கு ஒரு கௌரவம் கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என ரோஹித் சர்மா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளது குறிப்பிடப்பட்டது.



