இன்னைக்கு நாங்க இப்படி தோக்க காரணம் இதுதான்.. இரண்டாவது போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து – ரோஹித் வருத்தம்

Rohit
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது நேற்று கொழும்பு நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணியானது 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இந்த தொடரில் தற்போதைய நிலையில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 240 ரன்களை குவித்தது. இலங்கை அணி சார்பாக அவிஷ்கா பெர்னாண்டோ மற்றும் கமிந்து மென்டிஸ் ஆகியோர் தலா 40 ரன்கள் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 241 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது இலங்கை அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 42.2 ஓவர்களில் 208 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : ஒரு போட்டியில் நீங்கள் தோற்கும் போது உண்மையிலேயே அனைத்து விடயங்களையும் உங்களை வருத்தமடையச் செய்யும். இன்று நாங்கள் சரியான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

- Advertisement -

அதன் காரணமாகவே இந்த தோல்வியை சந்தித்து இங்கு நிற்கிறோம். இந்த போட்டியில் எங்களது செயல்பாடு எனக்கு ஏமாற்றத்தை தந்தது. இது போன்ற மைதானத்தில் சூழ்நிலையை தகவமைத்து கொண்டு விளையாட வேண்டியது அவசியம். இலங்கை அணி சார்பாக ஜெஃப்ரி ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையும் படிங்க : இந்தியாவுக்கு சாதகமான அம்பயர்? கோபமான ஜெயசூர்யா வாக்குவாதம்.. விராட் கோலியால் ரசிகர்கள் வேதனை

அவரது பந்துவீச்சு எங்களது அணியின் பேட்டிங் ஆர்டரை முற்றிலுமாக சிதைத்து விட்டது. இறுதியில் இந்த போட்டியில் நாங்கள் அடைந்த தோல்வி வருத்தம் அளிப்பதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement