அவரு இப்படி பண்ணுவார்னு நான் நெனச்சி கூட பாக்கல. ஹாட்ரிக் தோல்விக்கு பிறகு – ரோஹித் சர்மா வருத்தம்

Rohit
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 14-வது லீக் போட்டி நேற்று ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியானது துவக்கத்திலிருந்தே அதிரடியாக விளையாட முடியாமல் தவித்தது. கிட்டத்தட்ட 15 வரை பந்துகளுக்கு இணையாகவே ரன்களை குவித்து வந்த மும்பை அணி இறுதி நேரத்தில் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா மற்றும் பொல்லார்டு அதிரடி காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை குவித்தது.

Suryakumar Yadhav MI vs KKR

- Advertisement -

பின்னர் 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணியானது துவக்கத்திலிருந்தே சிறிய இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும், வெங்கடேஷ் ஐயர் நிலையாக நின்று அரைசதம் அடித்தார். அதேபோன்று பின்வரிசையில் ரசல் ஆட்டம் இழந்ததும் களமிறங்கிய பேட் கம்மின்ஸ் 15 பந்துகளில் 56 ரன்கள் அடித்து அட்டகாச படுத்தினார்.

இதனால் கொல்கத்தா அணி 16 ஓவர்களில் 162 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஏற்கனவே இந்த தொடரில் மும்பை அணி சந்தித்த முதல் இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்த வேளையில் தற்போது தொடர்ச்சியாக மூன்றாவது போட்டியிலும் தோல்வியை சந்தித்துள்ளது ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

MI vs KKR Pat CUmmins Venkatesh Iyer

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : நான் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. பேட் கம்மின்ஸ் வந்து விளையாடிய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. அவரே எங்களிடம் இருந்து வெற்றியை பறித்து விட்டார். இந்த மைதானமும் போட்டி செல்ல செல்ல பேட்டிங்க்கு மிகவும் ஒத்துழைத்தது.

- Advertisement -

நாங்கள் பேட்டிங் செய்யும்போது சரியான துவக்கம் கிடைக்கவில்லை. இருப்பினும் இறுதி ஐந்து ஓவர்களில் நல்ல ரன்களை குவித்தோம். அதே போன்று பந்துவீச்சில் நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். எங்களுடைய திட்டங்கள் எதுவும் பந்துவீச்சில் சரியாக செயல்படவில்லை.

இதையும் படிங்க : தோனியை அப்படி கூப்பிட ரொம்ப கஷ்டமா இருந்துச்சி. அவரும் வேணான்னு சொல்லிட்டாரு – ராபின் உத்தப்பா பேட்டி

இந்த போட்டியில் 15-வது ஓவர் வரை ஆட்டத்தில் நாங்கள் இருந்திருந்தாலும் அடுத்த சில நொடிகளில் அனைத்தும் மாறியது. நாங்கள் இந்த இடத்தில் நிற்க விரும்பவில்லை என ரோகித் சர்மா வருத்தம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement