IND vs BAN : பவுலிங் எல்லாம் நல்லா தான் இருந்துச்சி. ஆனாலும் நாங்க தோக்க இதுவே காரணம் – ரோஹித் வருத்தம்

Rohit-Sharma
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியானது நேற்று டிசம்பர் நான்காம் தேதி டாக்கா மைதானத்தில் நடைபெற்ற முடிந்தது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தீர்மானம் செய்ததால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது 41.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ரன்கள் மட்டுமே குவித்தது.

Mehidy

பின்னர் 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வங்கதேச அணியானது 46 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை எழுந்து 187 ரன்கள் குவித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி செய்த சில பில்டிங் தவறுகள் மற்றும் முக்கியமான நேரத்தில் கேட்ச்சை தவறவிட்டது என இந்திய வீரர்கள் செய்த தவறுகளே போட்டியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி பெற வேண்டிய இந்த ஆட்டத்தில் தோல்வியை சந்தித்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : இந்த போட்டி மிகவும் நெருக்கமாகவே சென்றது. இந்த போட்டியில் நாங்கள் மீண்டு வந்த விதம் மிகச் சிறப்பாக இருந்தது. 186 ரன்கள் என்பது வெற்றிக்கு போதுமான ரன்கள் இல்லை.

INd vs Ban Shreyas Iyer Ebodad Hussain

ஆனாலும் நாங்கள் பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்டோம். முதல் ஓவரிலிருந்து நாற்பதாவது ஓவர் வரை மிகச் சிறப்பாக பந்து வீசினோம். இதனால் இந்த தோல்விக்கு பந்துவீச்சு ஒரு காரணம் கிடையாது. பேட்டிங்கில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை.

- Advertisement -

முதல் 25 முதல் 30 ஓவர்கள் வரை விளையாடும்போது 240 முதல் 250 ரன்கள் வரை அடித்தால் சரியாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் மிடில் ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழவே எங்களால் போதுமான ரன்களை குவிக்க முடியாமல் போனது. நிச்சயம் இன்னும் 20 முதல் 30 ரன்கள் கூடுதலாக அடித்திருந்தால் எங்களுக்கு வெற்றி கிடைத்திருக்கும்.

இதையும் படிங்க : குல்தீப் சென்னுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் – 45 வருடங்கள் கழித்து அரிதான பரிதாப சாதனை படைத்த வங்கதேச வீரர்

இதுபோன்ற பவுலிங்க்கு சாதகமான கிரிக்கெட் மைதானத்தில் பேட்டிங் செய்ய வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அதேபோன்று போட்டியின் இறுதி நேரத்தில் பிரஷரை எவ்வாறு கையாள வேண்டும் என்பதையும் கற்றுக்கொள்ள வேண்டும் என ரோகித் வருத்தம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement