- Advertisement -
இந்திய கிரிக்கெட்

8 ஆவது இடத்தில் ஜடேஜா இருப்பதால் இருப்பதால் எனக்கு அந்த ப்ரீடம் இருக்கு – ரோஹித் சர்மா மகிழ்ச்சி

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதி போட்டியானது நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் குவித்தது.

ஜடேஜா இருக்கும்போது பயம் எதுக்கு : ரோஹித் சர்மா

இந்திய அணி சார்பாக குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பின்னர் 252 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 49 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்திய அணி சார்பாக இந்தப் போட்டியில் ரோகித் சர்மா 76 ரன்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 48 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்திய அணி பெற்ற இந்த வெற்றியின் மூலம் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை மூன்றாவது முறையாக கைப்பற்றி அசத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து இந்திய அணி பெற்ற வெற்றி குறித்து பேசிகையில் ரவீந்திர ஜடேஜாவின் முக்கியத்துவம் குறித்தும் கேப்டன் ரோகித் சர்மா சில கருத்துக்களை வெளிப்படுத்தி இருந்தார். இது குறித்து அவர் கூறுகையில் : நமது அணியில் ரவீந்திர ஜடேஜா எட்டாவது இடத்தில் இறங்குவதால் பேட்டிங் வரிசை பலமாக இருக்கிறது.

- Advertisement -

ஜடேஜாவே எட்டாவது இடத்தில் களமிறங்குகிறார் என்பதனால் எனக்கு போட்டியின் போது பேட்டிங்கில் கூடுதல் சுதந்திரம் கிடைக்கிறது. ஏனெனில் பின்வரிசை வரை நம்ப தகுந்த பேட்ஸ்மேன்கள் இருப்பதால் துவக்க வீரரான என்னால் அதிரடியாக விளையாட முடிகிறது.. அதிரடியாக விளையாடுவது தான் என்னுடைய இயல்பான ஆட்டம் என்றாலும் பின்னால் இருக்கும் வீரர்களின் பலத்தை சற்று யோசிக்க வேண்டும்.

இதையும் படிங்க : சாம்பியன்ஸ் டிராபி 2025: கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பரிசு இத்தனை கோடிகளா? முழு விவரம்

அந்த வகையில் நமது அணியின் தற்போதைய பேட்டிங் ஆர்டர் நீண்ட வரிசையாக இருப்பதால் என்னால் சுதந்திரமாக விளையாட முடிகிறது. அதுவும் ஜடேஜா போன்ற ஒரு நம்பிக்கைக்கு உரிய வீரர் எட்டாவது இடத்தில் களமிறங்குவது எனக்கு கூடுதல் சுதந்திரத்தை அளித்திருப்பதாக ரோகித் சர்மா பேசியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -