சாம்பியன்ஸ் டிராபி 2025: கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பரிசு இத்தனை கோடிகளா? முழு விவரம்

India Champions Trophy 2025
- Advertisement -

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று இந்தியா மாபெரும் சாதனை படைத்துள்ளது. பாகிஸ்தானில் நடைபெற்ற அந்தத் தொடரில் இந்திய அணி பாதுகாப்பு பிரச்சனைகளால் தங்களது போட்டிகளை துபாயில் விளையாடியது. அங்கே ரோஹித் சர்மா தலைமையில் லீக் சுற்றில் வங்கதேசம், பாகிஸ்தானை அசால்டாக தோற்கடித்த இந்தியா வலுவான நியூசிலாந்தை போராடி வீழ்த்தியது.

அப்படியே செமி ஃபைனலில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து வெளியேற்றிய இந்தியா 2023 உலகக்கோப்பை ஃபைனல் தோல்விக்கு பழி தீர்த்துக் கொண்டது. இறுதியில் மார்ச் 9ஆம் தேதி நடைபெற்ற ஃபைனல் போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அதனால் 2002, 2013க்குப்பின் 3வது முறையாக சாம்பியன்ஸ் கோப்பையில் வென்று இந்தியா உலக சாதனை படைத்தது.

- Advertisement -

சூப்பர் பரிசுதொகை:

இந்த வெற்றி இந்திய ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலைமையில் கோப்பையை வென்ற இந்திய அணி மற்றும் இதர அணிகளுக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகை விவரங்களை பார்ப்போம். முதலாவதாக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு சாம்பியன் பட்டத்துடன் 20 கோடி பிரம்மாண்ட பரிசு தொகையை ஐசிசி வழங்கியுள்ளது.

இது போக இந்தத் தொடரில் விளையாடியதற்காக ஒவ்வொரு அணிகளுக்கும் தலா 1 கோடி ரூபாய் பரிசாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் லீக் சுற்றில் பெற்ற ஒவ்வொரு வெற்றிகளுக்கும் தலா 28 லட்சம் சிறப்பு பரிசாக கொடுக்கப்பட்டுள்ளது. அதன் படி இந்தியா தங்களுடைய குரூப் சுற்றில் 3 வெற்றிகளைப் பெற்றது. இதன் அடிப்படையில் இந்தத் தொடரில் இந்திய அணி மொத்தமாக 21 கோடியே 74 லட்சம் பரிசு தொகையை வென்றுள்ளது.

- Advertisement -

நியூஸிலாந்துக்கு எவ்வளவு:

மறுபுறம் போராடி தோல்வியை சந்தித்த நியூசிலாந்து அணி 10 கோடி ரூபாய் பரிசாக பெற்றுள்ளது. செமி ஃபைனலில் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் தலா 4.6 கோடி ரூபாய்களை பரிசாக பெற்றுள்ளன. 5, 6வது இடங்களைப் பிடித்த அணிகளுக்கு ஆறுதல் பரிசாக தலா 2.9 கோடி கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: என்னா பணிவுயா.. குழந்தையாக மாறிய கவாஸ்கர்.. ஷமியின் அம்மாவிடம் கிங் கோலி செய்த பாசமிகு செயல்

கடைசி 2 இடங்களைப் பிடித்த அணிகள் தலா 1.1 கோடி பரிசுத்தொகை பெற்றுள்ளன. அந்த வகையில் இந்த தொடருக்காக மொத்தம் ஐசிசி சுமார் 60 கோடிகளை செலவிட்டுள்ளது. இது 2017 தொடரை விட இரு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement