டி20 உலகக்கோப்பைக்கு முன்னர் இந்திய செய்யப்படவுள்ள மாற்றங்கள் குறித்து பேசிய – ரோஹித் சர்மா

Rohit-Sharma
- Advertisement -

அடுத்த மாதம் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது டி20 போட்டியானது நாளை மொஹாலி மைதானத்தில் துவங்க உள்ளது.

INDvsAUS

- Advertisement -

எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெறும் இந்த டி20 தொடரானது அதற்கு தயாராகும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தை தொட்டுள்ளது. அதோடு ஆசிய கோப்பையில் காயம் காரணமாக விளையாட முடியாத பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர்.

அப்படி இந்திய அணி தற்போது முழு பலத்துடன் களமிறங்க உள்ளதால் இந்த தொடரில் இந்திய அணியின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்பதை பலரும் எதிர்நோக்கி வருகிறார்கள். இந்நிலையில் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணியின் அணுகுமுறை எவ்வாறு இருக்கும் என்பது குறித்த கேள்விகளுக்கு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெளிவான விளக்கம் ஒன்றினை கொடுத்துள்ளார். அது குறித்து அவர் கூறுகையில் :

Bhuvneshwar Kumar

அடுத்ததாக நடைபெற இருக்கும் ஆறு டி20 போட்டிகளிலும் நாங்கள் என்னவெல்லாம் வித்தியாசமாக முயற்சி செய்து பார்க்க விரும்புகிறோமோ அதனை எல்லாம் செய்வோம். பரிசோதனை செய்து பார்ப்பதற்கு எந்தவித எல்லையும் கிடையாது. எனவே வித்தியாசமான புது முயற்சிகளை மேற்கொண்டு அதன் முடிவுகளை பெறுவோம் என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் :

- Advertisement -

நான் கேப்டன் பொறுப்பு ஏற்ற உடனே ஆக்ரோஷமான அணுகுமுறை குறித்து தெளிவாக பேசிவிட்டேன். அணி 10 ரன்களுக்கு மூன்று விக்கெட்டை இழந்தால் எவ்வாறு விளையாட வேண்டும். விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் எடுத்திருந்தால் எவ்வாறு விளையாட வேண்டும் என்பது குறித்து வீரர்களுக்கு நன்றாக தெரியும். எனவே நாங்கள் திட்டம் தீட்டும் நேரம் எல்லாம் முடிந்துவிட்டது.

இதையும் படிங்க : IND vs AUS : டி20 தொடரை வெல்லப்போவது யார், வரலாற்று புள்ளிவிவரம் – அதிக ரன்கள், விக்கெட்கள் எடுத்த வீரர்களின் பட்டியல்

இனி களத்தில் இறங்கி செயல்பாடுகளை வெளிப்படுத்துவது மட்டும்தான் எங்களுடைய எண்ணம். கடந்த 10 மாதங்களாகவே வீரர்களின் செயல்பாடு குறித்து எந்தவித ஆலோசனைக் கூட்டமும் நடைபெறவில்லை. இந்த ஆறு டி20 போட்டிகள் முடிந்த பின்பு உலக கோப்பைக்கு முன்பாக நாங்கள் ஒரு ஆலோசனை கூட்டத்தை முடிவு செய்து அதன் மூலம் சரியான முடிவுகளை பெறுவோம் என ரோகித் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement