IND vs AUS : டி20 தொடரை வெல்லப்போவது யார், வரலாற்று புள்ளிவிவரம் – அதிக ரன்கள், விக்கெட்கள் எடுத்த வீரர்களின் பட்டியல்

INDvsAUS
- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை வெல்வதற்காக புதிய கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களிலும் தோல்வியடையாமல் வெற்றி நடை போட்டு உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக முன்னேறிய இந்தியா சமீபத்திய ஆசிய கோப்பையில் தோற்று பின்னடைவை சந்தித்தது. அதனால் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ள இந்திய அணி அத்தொடரில் செய்த தவறுகளை திருத்திக் கொள்ளும் வகையில் நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

indvsaus

- Advertisement -

அடுத்த மாதம் நடைபெறும் உலகக் கோப்பையை வெல்லும் அணிகளாக பார்க்கப்படும் உலகின் டாப் இவ்விரு அணிகளும் மோதும் இந்த தொடரில் தரமான நட்சத்திர வீரர்கள் பங்கேற்பதால் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

முன்னோட்டம்:
ஆஸ்திரேலியா: விரைவில் சொந்த மண்ணில் நடப்பு சாம்பியனாக உலக கோப்பையை தக்க வைக்க களமிறங்கும் ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாத இந்த தொடர் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில் உலகக்கோப்பையில் தங்களது அணிக்காக களமிறங்கும் தரமான இளம் வீரர்களை கண்டறிய அந்த அணிக்கு பொன்னான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

aus 1

இருப்பினும் ஆரோன் பின்ச் தலைமையில் ஸ்டீவ் ஸ்மித், பட் கமின்ஸ் போன்ற தேவையான அளவு உலகத்தரம் வாய்ந்த நட்சத்திர வீரர்களை கொண்ட அந்த அணிக்கு டிம் டேவிட், நாதன் எலிஸ் போன்ற திறமையான இளம் வீரர்கள் வலு சேர்க்கிறார்கள். மேலும் கடைசியாக கடந்த 2019இல் கடைசியாக இந்தியாவை அதன் சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் எதிர்கொண்ட பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா 2 – 0 என்ற கணக்கில் கோப்பையை வென்றது. எனவே இம்முறையும் தரமான வீரர்களுடன் இந்தியாவுக்கு சவால் கொடுத்து கோப்பையை வெல்ல அந்த அணி தயாராகியுள்ளது.

- Advertisement -

இந்தியா: தற்சமயத்தில் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக உலகத்தரம் வாய்ந்த வீரர்களைக் கொண்ட இந்தியா சொந்த மண்ணில் எப்போதுமே வலுவான அணியாக கருதப்படுகிறது. இருப்பினும் தரமான வீரர்களை சரியாகப் பயன்படுத்தாதே சமீபத்திய ஆசிய கோப்பையில் தோல்வியை கொடுத்தாலும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி பார்முக்கு திரும்பியது மிகப்பெரிய சாதகமாக பார்க்க படுகிறது.

IND vs ZIM Championsa

மேலும் பும்ரா, ஹர்ஷல் படேல் ஆகியோர் அணிக்கு திரும்பியது வலுவை சேர்க்கிறது. எனவே இப்போதும் சாம்பியன் அணியாக திகழும் இந்தியா உலகக்கோப்பையில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை தோற்கடிப்பதற்கு முன்னோட்டமாக சொந்த மண்ணில் இந்த தொடரில் கோப்பையை வெல்ல போராட உள்ளது.

- Advertisement -

புள்ளிவிவரங்கள்:
1. சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இவ்விரு அணிகளும் இதுவரை 23 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 13 போட்டிகளில் இந்தியா வென்று வலுவான அணியாக திகழ்கிறது. 9 போட்டிகளில் ஆஸ்திரேலியா வென்றது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

indvsaus

2. இத்தொடர் நடைபெறும் இந்திய மண்ணில் வரலாற்றில் இவ்விரு அணிகளும் மோதிய 7 போட்டிகளில் இந்தியா 4 போட்டிகளில் வென்று வலுவான அணியாகவே செயல்பட்டு வருகிறது. மறுபுறம் ஆஸ்திரேலியா 3 போட்டிகளில் வென்றுள்ளது.

- Advertisement -

பேட்டிங் புள்ளிவிவரங்கள்:
1. வரலாற்றில் இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதிய டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த டாப் 5 பேட்ஸ்மேன்களின் பட்டியல்:
1. விராட் கோலி : 718
2. ஆரோன் பின்ச் : 440
3. கிளன் மேக்ஸ்வெல் : 431
4. ஷிகர் தவான் : 347
5. ரோகித் சர்மா : 318

Kohli 1

2. வரலாற்றில் இவ்விரு அணிகள் மோதிய போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் மற்றும் ஷேன் வாட்சன் ஆகியோர் மட்டும் அதிகபட்சமாக தலா 1 சதம் அடித்துள்ளனர். இதுவரை எந்த இந்திய பேட்ஸ்மேனும் சதமடித்ததில்லை.

3. இவ்விரு அணிகள் மோதிய போட்டிகளில் அதிகபட்சமாக இந்தியாவின் விராட் கோலி 7 அரை சதங்கள் அடித்துள்ளார். 2வது இடத்தில் ரோகித் சர்மா மற்றும் மேத்யூ வேட் ஆகியோர் தலா 3 அரை சதங்கள் அடித்துள்ளனர்.

Watson

4. இந்தியா – ஆஸ்திரேலியா மோதிய போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த டாப் 3 பேட்ஸ்மேன்கள்:
1. ஷேன் வாட்சன் : 124*
2. கிளென் மேக்ஸ்வெல் : 113*
3. விராட் கோலி : 90*

பவுலிங் விவரங்கள்:
1. வரலாற்றில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த டாப் 5 பவுலர்கள்:
1. ஜஸ்பிரித் பும்ரா : 15
2. ரவிச்சந்திரன் அஸ்வின் : 10
3. ஷேன் வாட்சன் : 10
4. ஆடம் ஜாம்பா : 9
5. நேதன்-கவுன்டர்-நைல் : 8

ashwin 1

2. தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஷ்வின் இவ்விரு அணிகள் மோதிய டி20 போட்டிகளில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த பவுலராக சாதனை படைத்துள்ளார் : 4/11, 2014.

Advertisement