IND vs AUS : ரிஷப் பண்டிற்கு முன்பாக தினேஷ் கார்த்திக்கை களமிறக்க இதுதான் காரணம் – ரோஹித் விளக்கம்

Rohit-and-Karthik
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டியானது நேற்று நாக்பூர் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டிக்கு முன்பாக பெய்த பலத்த மழை காரணமாக அவுட் ஃபீல்டு ஈரமாக இருந்ததால் போட்டி கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரத்திற்கு பின்னர் தாமதமாக துவங்கியது. அதன் காரணமாக இரு அணிகளுமே தலா 8 ஓவர்கள் மட்டுமே விளையாடும் என அம்பயர்கள் அறிவித்தனர். அதன் பின்னர் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது.

Axar Patel

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர் கொள்ள முடியாமல் 8 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்களை மட்டுமே குவித்தது. இந்திய அணி சார்பாக அசத்தலாக பந்துவீசிய அக்சர் பட்டேல் 2 ஓவர்கள் வீசி 13 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். பின்னர் 91 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது துவக்கம் முதலே அதிரடி காட்டியது.

ஆனாலும் கேஎல் ராகுல் 10 ரன்கள், விராட் கோலி 11 ரன்கள், சூரியகுமார் யாதவ் ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்து வெளியேறினர். பின்னர் பாண்டியாவும் 9 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார். ஆனால் துவக்கம் முதலே அதிரடி காட்டிய ரோகித் சர்மா 20 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 46 ரன்களும், கடைசி நேரத்தில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் இரண்டு பந்துகளில் ஒரு சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி என 10 ரன்கள் விளாச இந்திய அணியானது 7.2 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Dinesh Karthik

இந்நிலையில் 8 ஓவர்கள் மட்டுமே கொண்டு இந்த போட்டியானது நடைபெற்றதனால் இந்த ஆட்டத்தில் கூடுதல் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டார். அதன்படி இந்திய அணி சேசிங் செய்த போது அதிரடி ஆட்டக்காரரான ரிஷப் பண்ட் முன்கூட்டியே களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இறுதிவரை அவர் களமிறங்காமலே போய்விட்டார்.

- Advertisement -

அதேவேளையில் பாண்டியாவிற்கு பின்னர் களம் இறங்கிய தினேஷ் கார்த்திக் இரண்டே பந்துகளில் போட்டியை அருமையாக பினிஷிங் செய்து கொடுத்தார். இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ரோஹித் சர்மா பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அதோடு ரிஷப் பண்ட்டிற்கு முன்னதாக தினேஷ் கார்த்திக் களமிறங்க என்ன காரணம் என்பது குறித்தும் தெளிவான விளக்கம் ஒன்றினை அளித்தார். அது குறித்து அவர் கூறுகையில் :

இதையும் படிங்க : IND vs AUS : அவர் போட்ட அந்த 2 ஓவர்தான் நாங்க தோக்க காரணம் – தோல்விக்கு பிறகு ஆரோன் பின்ச் பேட்டி

ரிஷப் பண்ட்டை களம் இருக்கலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் இறுதி நேரத்தில் டேனியல் சாம்ஸ் ஆப் கட்டர்களை வீசுவார் என்பதனால் தினேஷ் கார்த்திக்கை களம் இறக்க நினைத்தேன். அதேபோன்று அவரும் தனது ரோலை மிகச் சிறப்பாக செய்து கொடுத்து போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தார் என தினேஷ் கார்த்திகை ரோகித் சர்மா பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement