தொடர்ச்சியாக 8 தோல்விகளுக்கு பிறகு முதல் வெற்றியை பெற்ற மும்பை கேப்டன் – ரோஹித் பேசியது என்ன?

Rohit
- Advertisement -

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் 15-வது ஐபிஎல் தொடரானது சாம்பியன் அணிகளான சென்னை மற்றும் மும்பை ஆகிய அணிகளுக்கு இதுவரை குதூகலமாக அமையவில்லை. அதிலும் குறிப்பாக மும்பை அணியானது ஏற்கனவே தாங்கள் விளையாடிய 8 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பினை இழந்து மிகவும் பரிதாபத்திற்குரிய நிலையில் உள்ளது. இந்நிலையில் அவர்களுக்கு இறுதியாக ஒரு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக நேற்று மும்பை டி.ஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு வெற்றி கிடைத்துள்ளது.

- Advertisement -

அதன்படி இந்த போட்டியில் முதலாவதாக பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 158 ரன்களை மட்டுமே குவிக்க பின்னர் தொடர்ந்து விளையாடிய மும்பை அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 161 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

தொடர்ச்சியாக 8 தோல்விகளை சந்தித்து இருந்த மும்பை அணிக்கு இறுதியாக ஒரு ஆறுதலாக இந்த வெற்றி கிடைத்துள்ளது அந்த அணி வீரர்களிடையே தற்போது மீண்டும் சிறிதளவு புன்னகையை வெளிக்கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான இந்த போட்டியில் பெற்ற வெற்றி குறித்து பேசியிருந்த மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் :

SKY tilak Varma

எங்களிடம் இருந்து உண்மையான ஆட்டம் இந்த போட்டியில் தான் வெளிப்பட்டுள்ளது. இந்த வெற்றியை நாங்கள் எடுத்துக் கொள்ள விரும்புகிறோம். குறிப்பாக பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு ராஜஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை கொடுத்தோம். இதன் காரணமாக அடுத்தடுத்த விக்கெட்டுகளை எடுக்க முடிந்தது. மேலும் ராஜஸ்தான் அணியின் வீரர்களை எங்களால் கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடிந்தது.

- Advertisement -

அதோடு இந்த போட்டியில் எங்களது பேட்டிங்கும் தெளிவாக இருந்ததால் சிறப்பான ஒரு வெற்றி கிடைத்தது. இந்த தொடரில் நாங்கள் பல தோல்விகளை சந்தித்து இருந்தாலும் எங்களை யாரும் எளிதாக வீழ்த்தி விடவில்லை. சரியான பிளேயிங் லெவனை தேர்வு செய்ய அணியில் பல மாற்றங்களை செய்து பார்த்தோம்.

இதையும் படிங்க : ரோஹித் ஆட்டமிழந்ததும் வருத்தமடைந்த மனைவி. ஆறுதல் கூறிய பிரீத்தி அஷ்வின் – நடந்தது என்ன?

ஆனால் கடந்த போட்டிகளில் எதுவும் எங்களுக்கு பலனளிக்கவில்லை. இந்த போட்டியில் அனைத்தும் சரியாக வந்திருக்கிறது. பந்துவீச்சாளர்களை போல பேட்ஸ்மேன்களும் தங்களது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்துள்ளனர் என்று ரோஹித் சர்மா பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement