யார் பேச்சையும் கேக்காம இப்படியா பண்ணுவீங்க.. தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொண்ட – ரோஹித் சர்மா

Rohit-Toss
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று அக்டோபர் 16-ஆம் தேதி அன்று துவங்க இருந்தது. ஆனால் போட்டியின் முதல் நாளான நேற்று பெங்களூரு நகரில் பெய்த கனமழை காரணமாக ஒருபந்து கூட வீசப்படாமல் முதல் நாள் போட்டி கைவிடப்பட்டதாக அதிகாரவபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தவறாக சென்ற ரோஹித் சர்மாவின் முடிவு :

அதனை தொடர்ந்து இன்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது நாள் ஆட்டம் துவங்கியதும் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் இந்திய அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி மைதானத்தின் தன்மையை கணிக்க முடியாமல் உணவு இடைவேளை வரை வெறும் 34 ரன்களை மட்டுமே குவித்து ஆறு விக்கெடுக்களை இழந்து தடுமாறியது. பின்னர் 46 ரன்களுக்கு சுருண்டு மோசமான நிலையை சந்தித்துள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் ரோஹித் சர்மா தடுமாற டாசில் வெற்றி பெற்ற கேப்டன் ரோகித் சர்மா முதலில் தேர்வு செய்ததுதான் இந்திய அணியின் பின்னடைவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற எந்த ஒரு கேப்டனும் முதலில் பந்துவீச்சை தான் தேர்வு செய்திருப்பார்கள். ஆனால் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தது அனைவருக்கும் அதிருப்தியை ஏற்ப்படுத்தி உள்ளது.

- Advertisement -

கடந்த சில நாட்களாகவே மழை பெய்ததால் மைதானத்தில் இன்று மேகமூட்டம் காணப்பட்டது. அதோடு குளிர்ந்த நிலையிலும் இருந்தது. இதன் காரணமாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக சாதகம் ஏற்படும் என்று தெரிந்தும் ரோகித் சர்மா தவறான முடிவை எடுத்தது இந்திய அணியின் சரிவிற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : 46க்கு அவுட்.. பரவால்லயே நல்லா முன்னேறிட்டீங்க.. இந்தியாவை கலாய்த்த மைக்கேல் வாகன்.. தவறால் கைப் வேதனை

ஒருவேளை இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்திருந்தால் நிச்சயம் நியூசிலாந்து அணி வீரர்களை விரைவில் வீழ்த்தியிருக்க முடியும். அதே போன்று இந்திய அணியானது குறைந்தது 200 ரன்களையாவது அடிக்க வேண்டும் என்ற நிலையில் அதற்கு கூட வாய்ப்பு இல்லாமல் மிக மோசமான சரிவை இந்திய அணி சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement