46க்கு அவுட்.. பரவால்லயே நல்லா முன்னேறிட்டீங்க.. இந்தியாவை கலாய்த்த மைக்கேல் வாகன்.. தவறால் கைப் வேதனை

- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டி அக்டோபர் 16ஆம் தேதி பெங்களூரு நேரில் துவங்கியது. மழையால் முதல் நாள் ரத்து செய்யப்பட்ட அந்தப் போட்டி இரண்டாவது நாள் துவங்கியது. அதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய வீரர்கள் நியூசிலாந்தின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் வந்த வாக்கிலேயே பெவிலியன் தெருவினர். அதனால் சீட்டுக்கட்டுப் போல சரிந்த இந்தியா சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து வெறும் 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. விராட் கோலி, சர்பராஸ் கான், ராகுல், ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் டக் அவுட்டானார்கள்.

- Advertisement -

மோசமான சாதனை:

ரோகித் சர்மா 2 ரன்னில் அவுட்டான நிலையில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 20, ஜெய்ஸ்வால் 15 ரன்கள் எடுத்தனர். மறுபுறம் அனலாக பந்து வீசிய நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக மாட் ஹென்றி 5, வில்லியம் ஓரோர்கே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இப்போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய சொந்த மண்ணில் குறைந்தபட்ச ஸ்கோரை (46) பதிவு செய்து இந்தியா வரலாறு காணாத மோசமான சாதனை படைத்தது.

அது போக 36, 42க்குப்பின் ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா தங்களுடைய 3வது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. இந்நிலையில் இந்திய அணி ஆல் அவுட்டாவதில் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் கலாய்த்துள்ளார். அதாவது 2020 – 2021 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 36க்கு ஆல் அவுட்டான இந்தியா தங்களுடைய குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து மோசமான சாதனை படைத்தது.

- Advertisement -

கலாய்த்த வாகன்:

அந்த மோசமான சாதனையை இன்று முறியடிக்காமல் இந்தியா 10 ரன்கள் கூடுதலாக எடுத்து தப்பித்து விட்டதாக மைக்கேல் வாகன கலாய்த்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “இந்திய ரசிகர்களின் ஒளிமயமான பக்கத்தை பாருங்கள். குறைந்தபட்சம் நீங்கள் 36 ரன்களை தாண்டி விட்டீர்கள்” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 46க்கு ஆல் அவுட்.. இந்தியா 92 வருட வரலாறு காணாத 3 மோசமான சாதனை.. தெறிக்க விட்ட நியூஸிலாந்து

மறுபுறம் இந்தியா செய்த தவறு பற்றி முன்னாள் வீரர் முகமது கைஃப் “மழையால் நீண்ட நேரம் மூடப்பட்டிருந்ததால் ஈரப்பதம் செட்டிலான பிட்ச்சில் முதலில் பேட்டிங் செய்வது நல்ல ஐடியா கிடையாது. இந்தியா டிரிக்கை தவற விட்டுள்ளனர். ஆனால் நியூசிலாந்து சிறப்பான லைன், லென்த்தில் பவுலிங் செய்து கேட்சுகளைப் பிடித்து அசத்தியுள்ளது” என்று வேதனையுடன் ட்விட்டரில் கூறியுள்ளார்.

Advertisement