IND vs WI : தன்னை முந்திய கப்டிலை ஒரே நாளில் முந்தி உலகசாதனை படைத்த ரோஹித் – கோலி, தோனியையும் முந்தி புதிய சாதனை

Guptill-and-Rohit
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களுடன் 3 – 0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்து கோப்பையை வென்று சாதனை படைத்தது. அதை தொடர்ந்து இவ்விரு அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி ஜூலை 29-ஆம் தேதியான நேற்று இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு டிரினிடாட் நகரில் நடைபெற்றது. கேப்டன் ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக், புவனேஸ்வர் குமார் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் திரும்பிய நிலையில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு யாருமே எதிர்பாராத வகையில் ரோகித் சர்மாவுடன் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 44 ரன்கள் பர்ட்னர்ஷிப் அமைத்தபோது 3 பவுண்டரி 1 சிக்சருடன் 24 (16) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர் டக் அவுட்டானார். அடுத்த சில ஓவர்களில் ரிஷப் பண்ட் 14 (12) ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் நம்பிக்கை நட்சத்திரம் ஹர்திக் பாண்டியாவும் 1 (3) ரன்னில் அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் நங்கூரமாகவும் அதிரடியாகவும் பேட்டிங் செய்த கேப்டன் ரோகித் சர்மா 7 பவுண்டரி 2 சிக்சருடன் அரைசதம் அடித்து 64 (44) ரன்கள் விளாசி முக்கிய நேரத்தில் அவுட்டானார்.

- Advertisement -

நெருப்பான பவுலிங்:
ஆனால் அந்த நேரத்தில் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா 16 (13) ரன்களில் அவுட்டானதால் கடைசி நேரத்தில் தடுமாறிய இந்தியாவுக்கு அட்டகாசமாக பேட்டிங் செய்த தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 41* (19) ரன்கள் குவித்து அபார பினிசிங் கொடுத்தார். அதனால் 20 ஓவரில் இந்தியா 190/6 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக அல்சாரி ஜோசப் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 191 என்ற இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் ஆரம்பம் முதலே அனலாக பந்துவீசிய இந்திய பவுலர்களின் தரமான பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

அந்த அணிக்கு கெய்ல் மேயர்ஸ் 15 (6) சமர் ப்ரூக்ஸ் 20 (15) என அதிரடியான ரன்களை எடுத்த தொடக்க வீரர்கள் பெரிய ரன்களை எடுக்காமல் அவுட்டான நிலையில் அடுத்து களமிறங்கிய ஜேசன் ஹோல்டர் டக் அவுட்டாகி ஏமாற்றினார். அதனால் 42/3 என்ற சுமாரான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் கேப்டன் நிக்கோலஸ் பூரன் 18 (15), ரோவ்மன் போவல் 14 (17), சிம்ரோன் ஹெட்மயர் 14 (15) என முக்கிய வீரர்களும் பெரிய ரன்களை எடுக்காமல் இந்தியாவின் தரமான பந்துவீச்சில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் 122/8 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

ஒரேநாளில் உலகசாதனை:
இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக அஸ்வின், ரவி பிஷ்னோய், அர்ஷிதீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். அதனால் 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* (5) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்று அசத்தியுள்ளது. இந்த வெற்றிக்கு 41* ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இருப்பினும் தொடக்க வீரராக களமிறங்கி 15 ஓவர்கள் வரை அட்டகாசமாக பேட்டிங் செய்த கேப்டன் ரோகித் சர்மா அறிவிக்கப்படாத ஆட்டநாயகனாக செயல்பட்டார். கடந்த சில வருடங்களாகவே நல்ல தொடக்கத்தை பெற்றாலும் பெரிய ரன்களை எடுக்காததால் விமர்சனத்திற்கு உள்ளாகி வந்த அவர் நேற்றைய போட்டியில் அதிரடியான அரைசதம் அடித்து அந்த விமர்சனங்களை தூளாக்கினார்.

அதைவிட சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையை தன்வசம் வைத்திருந்த ரோகித் சர்மாவை ஜூலை 27இல் நடைபெற்ற ஸ்காட்லாந்துக்கு எதிராக முதல் டி20 போட்டியில் 40 ரன்கள் குவித்து முந்திய நியூசிலாந்து வீரர் மார்டின் கப்தில் புதிய உலக சாதனை படைத்தார். ஆனால் அடுத்த ஒரே ஒருநாள் 24 மணி நேரத்துக்குள் நடைபெற்ற இந்த வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் அவரை விட 64 ரன்கள் குவித்து மிரட்டிய ரோகித் சர்மா மீண்டும் அந்த உலக சாதனையை தன் வசமாக்கி இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். அந்தப் பட்டியல் இதோ:
1. ரோகித் சர்மா : 3443* (121 இன்னிங்ஸ்)
2. மார்டின் கப்தில் : 3399* (112 இன்னிங்ஸ்)
3. விராட் கோலி : 3308* (91 இன்னிங்ஸ்)

மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை 50க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற விராட் கோலியின் உலக சாதனையையும் அவர் தகர்த்து புதிய உலகசாதனை படைத்தார். அந்தப் பட்டியல்:
1. ரோஹித் சர்மா : 31*
2. விராட் கோலி : 30
3. பாபர் அசாம் : 27
4. டேவிட் வார்னர் : 23

இதுபோக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய கேப்டன்களின் பட்டியலில் எம்எஸ் தோனியை முந்தி 2-வது இடம் பிடித்துள்ளார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 1570
2. ரோஹித் சர்மா : 1117*
3. எம்எஸ் தோனி : 1112

Advertisement