எனக்கு என்டே கிடையாது.. ஒருநாள் போட்டிகளுக்கு கம்பேக் கொடுப்பது குறித்து ரோஹித் சர்மா பதிவு – விவரம் இதோ

Rohit Sharma
- Advertisement -

இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா கடந்த ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய கையோடு டி20 வடிவ போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதற்கடுத்து அண்மையில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார். இதன் காரணமாக அவர் ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாட இருக்கிறார். அதிலும் குறிப்பாக 2027 ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரை தான் இந்திய அணிக்காக விளையாட இருப்பதாகவும் ரோஹித் சர்மா விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா :

ஆனாலும் கடந்த சில மாதங்களாகவே ரோகித் சர்மாவிற்கு அடுத்து வரும் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடர் தான் கடைசி தொடர் என்றும் அந்த தொடரோடு ரோஹித் சர்மா ஓய்வு பெறுவார் என்றும் பேசப்பட்டு வருகிறது. ஆனால் தனது ஓய்வு குறித்து எந்த ஒரு கருத்தையும் வெளியிடாத ரோகித் சர்மா தற்போது ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணிக்கு கம்பேக் கொடுப்பது குறித்து முக்கியமான ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக தற்போது பயிற்சி ஆரம்பித்துள்ளதாகவும் தான் தற்போது மிகச் சிறப்பான உடற் தகுதியுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அந்த வகையில் வலைப்பயிற்சியில் விளையாடும் வகையில் ஒரு வீடியோ ஒன்றினை தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள ரோஹித் சர்மா :

அதில் “ஐ அம் ஹியர் அகைன், இட் ஃபீல்ஸ் ரியலி குட்” என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது நான் மீண்டும் இங்கு வந்திருக்கிறேன் தற்போது நல்ல நிலையில் உணர்கிறேன் என பேட்டிங் பயிற்சி செய்யும் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அவரது இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகிறது.

- Advertisement -

இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் விளையாட இருக்கிறார் என்பது உறுதியாகி உள்ளது. அந்த வகையில் ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணியானது அக்டோபர் 19-ஆம் தேதி முதல் அக்டோபர் 25-ஆம் தேதி வரை 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது.

இதையும் படிங்க : பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியில் ஏற்படவுள்ள மாற்றம் – உத்தேச பிளேயிங் லெவன் இதோ

இந்த தொடரில் இந்திய அணிக்காக ரோகித் சர்மா விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2007-ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமாகிய ரோஹித் சர்மா இதுவரை 273 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 32 சதம் மற்றும் 58 அரைசதங்கள் என 11,168 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement