ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார். 5 ஐபிஎல் கோப்பையை வென்ற அனுபவிக்க அவருடைய தலைமையில் இந்தியா இதுவரை ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லவில்லை. குறிப்பாக கடைசியாக நடந்த 2022 டி20 உலகக் கோப்பையில் அவருடைய தலைமையில் செமி ஃபைனலில் இந்தியா தோல்வியை சந்தித்து வெளியேறியது.
அதே போல 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பை தொடரில் அவருடைய தலைமையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஃபைனலில் இந்தியா தோல்வியை சந்தித்தது. எனவே இந்த தொடரில் சிறப்பாக விளையாடி இந்தியாவுக்கு கோப்பையை வென்று கொடுத்து தன்னை சிறந்த கேப்டன் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ரோஹித் சர்மா களமிறங்க உள்ளார். இந்நிலையில் நவீன யுகத்திற்கு தகுந்தாரப் போல் டெக்னாலஜியை தாம் பயன்படுத்துவதாக ரோகித் தெரிவித்துள்ளார்.
ரோஹித்தின் வழி:
அதாவது எதிரணியின் பலம், பலவீனம் ஆகியவற்றை கணினி தரவுகளின் அடிப்படையில் தீர்மானித்து கேப்டன்ஷிப் திட்டங்களை வகுப்பதாக அவர் கூறியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “வித்தியாசமான வீரர்களை கையாளுவது தான் எந்த ஒரு கேப்டனுக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்கும். ஏனெனில் ஒவ்வொரு தனி நபரிடமும் வித்தியாசமான சிந்தனை இருக்கும்”
“எனவே அந்த அனைத்தையும் உள்வாங்கி அதற்கு தகுந்தார் போல் எதிரொலிப்பது கேப்டனின் வேலையாகும். நான் கேப்டனாக வந்தது முதல் ஒவ்வொரு வீரருக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன். ஏனெனில் அப்போது தான் அனைவரும் நாம் அணியின் அங்கமாக இருக்கிறோம் என்பதை வீரர்கள் உணர்வார்கள். உங்களிடம் ஒரு வீரர் பிரச்சனை என்று வரும் போது அதை நீங்கள் கவனமாக கேட்டு அதற்கு சிறந்த தீர்வை கொடுக்க வேண்டும்”
“அத்துடன் கேப்டனாக மட்டுமின்றி ஒரு வீரராகவும் நான் தயாராக வேண்டும் என்று நம்புகிறேன். என்னுடைய கேப்டன்ஷிப் அணுகுமுறை வித்தியாசமானது. நான் டேட்டா அடிப்படையிலான அலசல் மற்றும் புதிய ட்ரெண்டை புரிந்து பின்பற்றுவேன். மேலும் குறிப்பிட்ட சூழ்நிலைகளை சமாளிப்பது பற்றி அணியின் மீட்டிங்கில் நான் நிறைய நேரம் செலவிடுவேன்”
இதையும் படிங்க: இப்போ மட்டும் குலு குலுன்னு இருக்குதா? கவுதம் கம்பீரை வம்பிற்கு இழுக்கும் தோனி ரசிகர்கள் – காரணம் போதோ
“அடிப்படையில் நான் சூழ்நிலைகளை தெரிந்து கொள்வது முக்கியம். ஏனெனில் களத்திற்கு செல்லும் போது அதற்கான விடைகளுடன் நான் செல்ல வேண்டும். டி20 ஃபார்மேட் எப்போதும் சவாலானது. அதில் ஒவ்வொரு வீரரும் வித்தியாசமாக விளையாடுவார்கள். எனவே அதை புரிந்து கொண்டு நீங்கள் உங்களுடைய பவுலர்களிடம் அதற்கு தகுந்தார் போல் பந்து வீசுவதற்கான திட்டங்களை கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.



